தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி தரத்தில் கவனம் செலுத்தாத அதிகாரிக்கு நோட்டீஸ்!

கல்வி தரத்தில் கவனம் செலுத்தாத அதிகாரிக்கு நோட்டீஸ்!

கல்வி தரத்தில் கவனம் செலுத்தாத அதிகாரிக்கு நோட்டீஸ்!


UPDATED : நவ 06, 2015 12:00 AM

ADDED : நவ 06, 2015 10:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2015 12:00 AM ADDED : நவ 06, 2015 10:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவண்ணாமலை
: மாணவர்களின் கல்வி தரம் உயர்த்துவதில் கவனம் செலுத்தாத
, ஜமுனாமரத்தூர் உதவி தொடக்க கல்வி அலுவலரிடம் விளக்கம் கேட்டு, மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில், கடந்த சில நாட்களுக்கு முன் மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன் ஆய்வு செய்தார். அப்போது, அங்குள்ள உறைவிட பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் போலி வருகை பதிவேடு, பொய்யான கணக்கு காட்டி நிதி மோசடி, பல ஆசிரியர்கள் பள்ளிக்கு வராமலேயே கையெழுத்து போட்டு வந்தது, குழந்தைகளுக்கு அடிப்படை கல்வித்திறன் கூட இல்லாமல் பின்தங்கிய நிலையில் உள்ளது ஆய்வில் தெரிந்தது. 

இதையடுத்து, மூன்று தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில், ஜவ்வாது மலையில் உள்ள பள்ளிகளில், மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் பணியை சரியாக கண்காணிக்காத, ஜமுனாமரத்தூர் உதவி தொடக்க கல்வி அலுவலர் கோவிந்தராஜூக்கு, திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us