தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வகுப்பறையில் பூச்சி தொல்லை; ஆசிரியர்கள் சோதிக்க உத்தரவு

வகுப்பறையில் பூச்சி தொல்லை; ஆசிரியர்கள் சோதிக்க உத்தரவு

வகுப்பறையில் பூச்சி தொல்லை; ஆசிரியர்கள் சோதிக்க உத்தரவு


UPDATED : டிச 14, 2015 12:00 AM

ADDED : டிச 14, 2015 10:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 14, 2015 12:00 AM ADDED : டிச 14, 2015 10:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
:
 வகுப்பறையில் பூச்சிகள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்த பிறகே, மாணவர்களை அனுமதிக்க வேண்டும்&' என, தலைமை ஆசிரியர்களுக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இன்று, பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன. இந்நிலையில், அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும், கல்வித்துறை அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.

அதன் விவரம்:

  • கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி, மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி, கிணறு, ஆழ்துளை கிணறு போன்றவற்றை பிளீச்சிங் பவுடர் மூலம் சுத்தம் செய்ய வேண்டும். நீரில் கிருமிகளை கொல்லும் குறிப்பிட்ட அளவு, குளோரின் கலந்த பின் குடிக்க தர வேண்டும்
  • பள்ளி வளாகங்களில், குப்பை இல்லாமல் அகற்ற வேண்டும். குப்பை தேங்கி கிடந்தால் கொசு மற்றும் ஈக்கள் உற்பத்தியாக வாய்ப்பு ஏற்படும்
  • எலுமிச்சை மற்றும் குளோரினை, 4க்கு, 1 என்ற விகிதத்தில் கலந்து, பள்ளி வளாகத்தில் சுத்தம் செய்ய வேண்டும். வகுப்பறைகளை, பினாயில் மூலம் சுத்தம் செய்ய வேண்டும்
  • மின் சாதனங்கள், ஸ்விட்ச்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கட்டடத்தில் எங்காவது விரிசல் போன்ற பாதுகாப்பற்ற தன்மை இருந்தால், அந்தப் பகுதியை பயன்படுத்தக் கூடாது
  • வெள்ளம் காரணமாக, ஊர்வன, பறப்பன வகை பூச்சிகள் வகுப்பறைகளில் இருக்க வாய்ப்புள்ளது. எனவே, வகுப்பறைகளுக்குள் சென்று, முழுமையாக ஆய்வு செய்து, அதன் பிறகே மாணவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us