தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பல்கலை கருத்தரங்கில் கலாட்டா மாணவருக்கு சரமாரி அடி

பல்கலை கருத்தரங்கில் கலாட்டா மாணவருக்கு சரமாரி அடி

பல்கலை கருத்தரங்கில் கலாட்டா மாணவருக்கு சரமாரி அடி


UPDATED : டிச 16, 2015 12:00 AM

ADDED : டிச 16, 2015 11:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 16, 2015 12:00 AM ADDED : டிச 16, 2015 11:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை பல்கலைக்கழகத்தில், நேற்று நடந்த கருத்தரங்கில், மாணவர் ஒருவர் எழுந்து கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை, பல்கலை ஊழியர்களும், அதிகாரிகளும் தாக்கினர். 

அதை தொடர்ந்து ஏற்பட்ட பதற்றத்தால், வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. சென்னை பல்கலையின், தேசிய பேராபத்து மற்றும் பேரிடர் மையம் சார்பில், சென்னை வெள்ளம் பேரிடர் மேலாண்மை என்ற தலைப்பிலான கருத்தரங்கம், நேற்று நடந்தது.

பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.தாண்டவன் பேசியதாவது:

எம்.ஜி.ஆர்., போன்ற பல முன்னாள் தலைவர்களின் ஆட்சி காலங்களில், மழை, வெள்ளம் ஏற்பட்டால், அரசு தான் அனைத்துப் பணிகளையும் செய்யும். ஆனால், சமீபத்திய வெள்ளத்தின் போது, அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள் என, ஆளாளுக்கு நிவாரணம், மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்; இதனால், குழப்பம் தான் ஏற்பட்டது.இவ்வாறு அவர் பேசினார். தேசிய பேரிடர் மீட்பு மைய கமாண்டன்ட் ரேகா நம்பியார் பேசியதாவது:பெரும்பாலான மக்கள், வீடுகளை விட்டு வரத் தயங்கினர். உணவுப்பொருட்ளை வாங்கி சேமித்து வைத்தனர். மறுநாள் சென்றபோது, உணவை வாங்க மறுத்து தேவையானவர்களுக்கு தரும் படி கூறினர். இதுபோன்ற பல மனிதாபிமான நிகழ்வுகளை, மீட்புப் பணியின் போது பார்க்க முடிந்தது. இவ்வாறு அவர் பேசினார்.

மாநில தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலா சாமி பேசுகையில், அரசின் நிவாரண உதவிகளை பட்டியலிட்டார். அப்போது, பேச்சை நிறுத்தக் கோரும் வகையில், கடைசி வரிசையில் இருந்த மாணவர் ஒருவர் கை தட்டினார்; இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.

அங்கு நின்றிருந்த பல்கலை அதிகாரிகளும், ஊழியர்களும் அந்த மாணவரை பலவந்தமாக வெளியேற்றினர்; அவரை தாக்கியதாகவும், மாணவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது; இதனால், பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான மாணவர்கள், பல்கலை வளாகத்தில் கூடினர்; போலீசார் வரவழைக்கப்பட்டனர்; வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. தாக்குவது தவறுஇச்சம்பவம் பற்றி, பல்கலை துணைவேந்தர் தாண்டவன் கருத்து கூற மறுத்து விட்டார். 

பதிவாளர் டேவிட் ஜவஹர் கூறியதாவது:

பல்கலை ஊழியர்கள் தாக்கியதாக மாணவர் கூறியது உண்மை என்றால், மன்னிப்பு கேட்க தயார் என, அந்த மாணவரிடம் துணைவேந்தர் கூறினார். ஒருவரை தாக்குவது தவறு.

மாணவரிடம் எழுத்து மூலமாக புகார் பெறப்பட்டுள்ளது. இது குறித்து, ஒரு நபர் குழு அமைத்து, விசாரணை நடத்தப்படும்; போலீசில் புகார் அளிக்கப்படவில்லை. நாங்கள் ஆடை விஷயத்தில் கெடுபிடி காட்டுவது இல்லை தான்; அந்த மாணவர், அரை, டிரவுசர் அணிந்து வந்தது ஏற்புடையதா என தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us