தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் தேசிய வரலாற்று கருத்தரங்கம்

பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் தேசிய வரலாற்று கருத்தரங்கம்

பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் தேசிய வரலாற்று கருத்தரங்கம்


UPDATED : மார் 22, 2016 12:00 AM

ADDED : மார் 22, 2016 10:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 22, 2016 12:00 AM ADDED : மார் 22, 2016 10:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி
: புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி வரலாற்றுத்துறை சார்பில்
, தென்னிந்தியாவில் தானம் மற்றும் தருமத்தின் சமூக வரலாறு என்ற தலைப்பில் 2 நாள் தேசிய கருத்தரங்கு நேற்று துவங்கியது.

இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி மையம், இந்திய வரலாற்று ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து நடந்த கருத்தரங்கில், பேராசிரியர் கீதா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சசிகாந்ததாஸ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். புதுச்சேரி பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் சந்திரிகா துவக்கவுரையாற்றினார். டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வரலாற்று படிப்பு மையத்தின் பேராசிரியர் மகாலட்சுமி கருத்தரங்கின் நோக்கம் குறித்து பேசினார். 

ரூசா உறுப்பினர் செயலர் டாக்டர் மோகன்தாஸ் சிறப்புரையாற்றினார். கருத்தரங்கில் 25க்கும் மேற்பட்ட வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்க உள்ளனர். கருத்தரங்கின் நிறைவு விழா இன்று 22ம் தேதி நடக்கிறது. கருத்தரங்கு ஏற்பாடுகளை பாரதிதாசன் மகளிர் கல்லுாரி வரலாற்றுத்துறை தலைவர் ராமசந்திரரெட்டி தலைமையில் பேராசிரியர்கள் செய்திருந்தனர். பேராசிரியர் மெர்சி தேன்மொழி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us