வங்கி, இன்சூரன்ஸ் படிப்புக்கு சிறந்த கல்லூரி அவசியம்!
வங்கி, இன்சூரன்ஸ் படிப்புக்கு சிறந்த கல்லூரி அவசியம்!
UPDATED : ஏப் 08, 2016 12:00 AM
ADDED : ஏப் 08, 2016 11:27 AM
வங்கி, இன்சூரன்ஸ் படிப்புகளுக்கு சிறந்த கல்லுாரிகளை தேர்வு செய்வது அவசியம் என மதுரை ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் இணை பேராசிரியர் ஈஸ்வரன் தெரிவித்தார்.
வங்கி
மற்றும் இன்சூரன்ஸ் துறையில் வாய்ப்புகள் குறித்து அவர் பேசியதாவது:
இந்திய
ரிசர்வ் வங்கியிடம் 20 நிதி நிறுவனங்கள்
வங்கி துவங்க அனுமதி கோரியுள்ளது. இதுதவிர தபால் துறையிலும் வங்கிகள் துவங்க
அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால் தற்போது 1.5 லட்சம் வேலை வாய்ப்புகள் பெருகியுள்ளது.
நாட்டில் 10 ஆயிரம் வங்கி கிளைகள் உள்ளன. ஒட்டு மொத்தமாக 4 சதவீத மக்கள் மட்டுமே இன்சூரன்ஸ் எடுத்துள்ளனர். மீதமுள்ள 96 சதவீதத்தினர் இன்சூரன்ஸ் எடுக்கவில்லை. அதுவும் குறிப்பாக மருத்துவ காப்பீட்டுத்துறையில் அதிக வாய்ப்புக்கள் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
