தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழகத்தில் போலீஸ் பல்கலை அமைக்க மாணவர்கள் கோரிக்கை

தமிழகத்தில் போலீஸ் பல்கலை அமைக்க மாணவர்கள் கோரிக்கை

தமிழகத்தில் போலீஸ் பல்கலை அமைக்க மாணவர்கள் கோரிக்கை


UPDATED : ஏப் 13, 2016 12:00 AM

ADDED : ஏப் 13, 2016 10:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 13, 2016 12:00 AM ADDED : ஏப் 13, 2016 10:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி
: கேரளா குஜராத் மாநிலங்கள் போல தமிழகத்தில்
 போலீஸ்துறை பல்கலைகழகம் அமைக்க புதிதாக அமைய உள்ள அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் சட்டம், மருத்துவம், விவசாயம் என பல்வேறு துறைகளுக்கு 21 பல்கலைகள் உள்ளன. சென்ற  பட்ஜெட்டில் மத்திய அரசு விளையாட்டுதுறைக்கு பல்கலை அமைக்க மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இதைப்போல போலீஸ்துறை அனைத்து பிரிவினருக்கும் முக்கியமானது மட்டுமின்றி அவசியமானதாக உள்ளது. ராஜஸ்தான், குஜராத், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் போலீஸ்துறைக்கு பல்கலை அமைக்கப் பட்டுள்ளன.

தமிழகத்தில் குற்றங்கள் பெருகிவரும் இச்சூழலில் குற்றவியல் கோட்பாடுகள், தடயவியல் அறிவியல், தண்டனை நிர்வாகம், சிறார் குற்றங்கள், சைபர் குற்றங்கள், சாட்சியச்சட்டம் உள்ளிட்டவைகளை கொண்டு ஓய்வுபெற்ற முன்னாள் போலீஸ் அதிகாரிகள், தற்போதைய திறன்வாய்ந்த அதிகாரிகளை உள்ளடக்கிய புதிய போலீஸ் துறை பல்கலை அமைக்க வேண்டும். 

அதற்கு புதிய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என ஆயக்குடி இலவச பயிற்சி மைய இயக்குனர் ராமமூர்த்தி மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us