தேர்தல் அறிக்கை; தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு!
தேர்தல் அறிக்கை; தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு!
UPDATED : ஏப் 23, 2016 12:00 AM
ADDED : ஏப் 23, 2016 11:06 AM
2016ம் ஆண்டிற்கான தமிழக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை, தொழில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு ஓர் பார்வை.
பழங்கஞ்சி
:
எளிமையான,
வெளிப்படையான, தொலைநோக்குடன் கூடிய தொழில் கொள்கை வகுக்கப்படும். தமிழகத்தில்
பல்வேறு துறைகளுக்கு தனித்தனி தொழில் கொள்கைகளை அ.தி.மு.க., அரசு ஏற்கனவே வகுத்துள்ளது. ஏரோஸ்பேஸ்
பார்க் போன்றவை அறிவிப்புடன் நின்று விட்டன.
தொழில் துறையில்,
அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில்,
புதிதாக தொழில் துவங்க, தகுந்த உதவிகள் செய்யப்படும்.
இதுபோன்ற
அறிவிப்புகள், தி.மு.க., - பா.ம.க., தேர்தல் அறிக்கைகளிலும் இடம்பெற்றுள்ளன.
என்னென்ன தொழில்களுக்கு, எவ்வகையான தொழில் உதவிகள் வழங்கப்படும்
என்பதை விரிவாக விளக்கியிருக்கலாம்.
தகுதி வாய்ந்த
அனைவருக்கும் பாகுபாடு இன்றி கடன் கிடைக்க, முத்ரா வங்கி மூலம் வழிவகை செய்யப்படும்.
இது, மத்திய அரசு பட்ஜெட்டில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தமிழக அரசு,
சிறு வியாபாரிகளுக்கு கூட்டுறவுத் துறை மூலம்
கடன் வழங்கி வருகிறது.
கோவை உட்பட
முக்கிய தொழில் மையங்களில் மின் பற்றாக்குறையை போக்க, சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யும் தொழில் முனைவோருக்கு, அரசு, 50 சதவீத மானியமும், உட்கட்டமைப்பு
வசதிகளும் செய்து தரும்.
இது தொடர்பாக,
தமிழக அரசின் திட்டங்கள் ஏற்கனவே உள்ளன. மத்திய
அரசும் திட்டங்களை அறிவித்துள்ளது. தி.மு.க., - பா.ம.க., தேர்தல் அறிக்கைகளிலும் இது இடம்
பெற்றுள்ளது.
தொழில் துறையில்
பின் தங்கியிருக்கும் தென் மாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் தொழில் வளம் குறைந்த
பகுதிகளில் தொழில் துவங்க முன்வருவோர் ஊக்குவிக்கப்படுவர்.
இதுவும் பழைய
திட்டம். இருந்தாலும் இதை வரவேற்கலாம். இதுபோல் விதவிமான அறிவிப்புகளை மாநில அரசு
வெளியிட்டு ரொம்ப நாளாகிவிட்டது. பிற கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் இது
காணப்படுகிறது.
பின்தங்கிய மாவட்டங்களில், தொழில் துவங்குவோருக்கு ஊக்கம் தரும் விதமாக, வரிச் சலுகை உள்ளிட்ட மானியங்கள் அளிக்கப்படும். அவர்களுக்கு அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும், அரசு செய்து கொடுக்கும். இது ஏற்கனவே மற்ற கட்சிகளால் அறிவிக்கப்பட்டுள்ளன.
ரப்பர் அதிகளவு உற்பத்தியாகும் கன்னியாகுமரி மாவட்டத்தில், ரப்பர் பூங்கா அமைக்கப்படும். இது, ஒவ்வோர் தேர்தலின்போதும், அரசியல் கட்சிகள் அறிவிக்கும் திட்டம் ஆகும். பா.ஜ.,வும் இதை விட்டு வைக்கவில்லை.
சாத்தியம்
:
தொழில் துறையில்
பின்தங்கியுள்ள மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் சாயமேற்றுதல் மற்றும் சலவை
செய்தல் உள்ளிட்ட தொழில்கள் சுத்திகரிக்கப்பட்ட கழிவுகளை கடலில் கலக்கும்
ஏற்பாட்டோடு துவக்கப்படும்.
வரவேற்கத்தக்கது:
கடலில் ரசாயன கழிவுகள் கலப்பதால், கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால், ரசாயன கழிவுகளை சுத்திகரித்த பிறகு, கடலில் விடுவது கடலியல் சூழலை பாதுகாக்க உதவும். சுத்திகரித்த பிறகு கடலில் விடுவதை அதிகாரிகள் மூலம் உறுதி செய்ய வேண்டும்.
