தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காந்திகிராம பல்கலையில் உலகத் தமிழ் இணைய மாநாடு!

காந்திகிராம பல்கலையில் உலகத் தமிழ் இணைய மாநாடு!

காந்திகிராம பல்கலையில் உலகத் தமிழ் இணைய மாநாடு!


UPDATED : மே 21, 2016 12:00 AM

ADDED : மே 21, 2016 10:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 21, 2016 12:00 AM ADDED : மே 21, 2016 10:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காந்திகிராமம்
: காந்திகிராம பல்கலையில் உலகத் தமிழ் இணைய மாநாடு வரும் செப்டம்பர் முதல்வாரத்தில் நடக்க உள்ளது.

கடந்த 2000ல் உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் பதிவு செய்து துவங்கப்பட்டது.

தன்னார்வ தொண்டர்களின் விடா முயற்சியால் 1990களின் இறுதியில் இருந்து இணைய வழியிலான தமிழ் கணிமைத் துறையை வளர்க்கும் பணியில் இந்த அமைப்பு இயங்கி வருகிறது.

அச்சு, புகைப்படம் மற்றும் ஓலைச்சுவடிகளுக்கான எழுத்துணர்வித்தல் தொழில்நுட்பம், மருத்துவத்துறைக்கான தமிழ் கணிமை தொழில்நுட்பங்கள், அலைபேசி தொழில்நுட்பம் போன்ற கருப் பொருளில், காந்திகிராம பல் கலையில் மாநாடு நடக்க உள்ளது.

ஆய்வுக் கருத்தரங்குகள், கண்காட்சி அரங்குகள், மக்கள் அரங்கு என்ற 3 பிரிவுகளாக நடத்தப்படுகிறது. 1997ல்முதல் மாநாடு சிங்கப்பூரில் நடந்தது. பிறகு மலேசியா, அமெரிக்கா, ஜெர்மன், புதுச்சேரி என பல இடங்களில் நடந்தது.

2015ல் சிங்கப்பூர் 14வது மாநாடு நடந்தது. இந்தாண்டு காந்திகிராம பல்கலையில் செப்டம்பர் 9, 10, 11 ஆகிய நாட்களில் நடக்க உள்ளது. எங்கும் கணினித் தமிழ், எதிலும் கணினித் தமிழ் என்ற தலைப்பில் மாநாடு பல்கலையில் நடக்க உள்ளது. இதில் உலகத்தமிழ் அறிஞர்கள் 5 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us