தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ படிப்பு சிறக்க நிரந்தர வழி பிறக்கட்டும்!

மருத்துவ படிப்பு சிறக்க நிரந்தர வழி பிறக்கட்டும்!

மருத்துவ படிப்பு சிறக்க நிரந்தர வழி பிறக்கட்டும்!


UPDATED : மே 30, 2016 12:00 AM

ADDED : மே 30, 2016 10:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 30, 2016 12:00 AM ADDED : மே 30, 2016 10:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இத்தேர்வை ஏழு மாநிலங்கள் விரும்புவதாகவும், மேலும் இத்தேர்வை எளிதாக மாநில அரசு சார்ந்த கல்வி பயின்றவர்கள் சந்திக்க இயலாது என்பதே, பெரும் விவாதப் பொருளானது.

மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வுக்கு விலக்கு தந்து, மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்திருக்கிறது. இந்தாண்டிற்கு தரப்பட்ட விலக்கை ஆட்சேபித்து, சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. நல்லவேளையாக அரசின் அவசரச் சட்டத்தை தற்போது இடைக்காலத்தில் நிறுத்தி, அதனால் குழப்பம் ஏற்படுத்த, சுப்ரீம் கோர்ட் விரும்பாதது நல்லது.

மத்திய அரசு அவசரச் சட்டப்படி, இந்த ஆண்டு, தமிழகத்தில், இளநிலை மருத்துவ படிப்புக்கு தேசிய பொது நுழைவுத் தேர்வு இருக்காது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலே நடக்கும். இப்போது எழுந்துள்ள சர்ச்சையானது, ஒரேடியாக இனி, ’நீட்’ என்ற பொது நுழைவுத் தேர்வு மட்டுமே எதிர்காலத்தில் நின்று நீடிக்குமா? அப்படி என்றால், மாநிலங்களில் மொழிப் பாடத்தில் படித்த மாணவ, மாணவியர் இத்தேர்வுக்கான போட்டியில் மற்றவர்களுடன் நிற்க முடியுமா என்ற விவாதம் எழுந்திருக்கிறது.

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படித்தவர்கள், அதிக அளவில் டாக்டர் பட்டப் படிப்புக்கு சேர்ந்து விட வழிவகுக்கும். கல்வியின் குளறுபடிகளை பலகோணங்களில் விவாதிப்பது நல்லது. இன்று எழுந்த இப்பிரச்னைக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு, அதற்குப் பின் மத்திய சுகாதார நல அமைச்சக வழிகாட்டுதலைக் கொண்ட சட்டக்குறிப்புகள், இந்திய மருத்துவக் கவுன்சிலில் தற்போதுள்ள குளறுபடிகளுக்கு தீர்வு காணப்படும் வழிகள் ஆகியவை பற்றி பேச வைத்திடும்.

இரண்டாண்டு பதவியை வகித்த மோடி அரசு, அரசு மருத்துவர்களின் வயது வரம்பை, 65 ஆக உயர்த்தியது நல்லது. சில துறைகளில் அனுபவத்துடன், பிரச்னைகளைக் கையாளத் தெரிந்தவர்கள் தேவை. தமிழகத்தில், தனியாக கிளினிக் வைத்து, வசதியாக டாக்டர்கள் இருக்கும் நடைமுறை இருப்பதால், இங்கு இதற்கு வரவேற்பு காணோம். ஆனால், 1,000 பேருக்கு ஒரு டாக்டர் என்ற விகிதத்தை கருதினால், நாடு முழுவதும் ஆறு லட்சம் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது.

மேலும், இந்தியாவில், விரைவில் நீரிழிவு பாதிப்பு, தைராயிடு வகை பாதிப்பு, மூச்சுத்திணறல் நோய் என, பலவகை பாதிப்புகளை கொண்ட மக்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் போது இந்தப் பிரச்னையும் அலசப்படுகிறது. இதுவரை, ’மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா’ - எம்.சி.ஐ., என்ற அமைப்பு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி தந்த விதம், பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. ஆனால், பல ஆண்டுகளாக அதில் காணப்பட்ட ஊழல், அவ்வப்போது வெளிவந்தாலும் விடிவு ஏற்படவில்லை.

ஆனால், இதில் உள்ள அழுக்கு, குப்பைகளை களைய இதைக் கண்காணிக்கும் மேலமைப்பாக ஓய்வு பெற்ற நீதிபதி, ஆர்.எம்.லோதா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்திய கிரிக்கெட் கண்ட்ரோல் போர்டு ஊழலைக் களையெடுக்க வழி கூறிய இந்த நீதிபதி, எம்.சி.ஐ., குழப்பங்களுக்கும் தீர்வு தரலாம்.

மருத்துவப் படிப்பில் இளநிலைப்படிப்பு மிகவும் முக்கியத்துவம் பெற்றது. பல் மருத்துவப் படிப்புக்கு அதிக ஆர்வம் இப்போது இல்லை. மருத்துவம் குறித்த விஞ்ஞான தொழில்நுட்பம் உலக அளவில் தினமும் விரிவடையும் போது, மருத்துவ கல்விச் சேர்க்கைக்கு தகுதியை வளர்க்க வேண்டிய சிந்தனையை இந்த பிரச்னை விவாதமாக்கினால், அத்துறை இந்தியாவில் சிறக்க பல வழிகள் தானாகவே உருவாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us