UPDATED : ஜூன் 03, 2016 12:00 AM
ADDED : ஜூன் 03, 2016 10:17 AM
மதுரையில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான நிலையில் மரக்கிளைகளை வெட்டியது தொடர்பாக, மாநகராட்சி கல்வி அதிகாரி ரேணுகாதேவி நேரில் விசாரணை நடத்தினார்.
மாநகராட்சி
இளங்கோ மேல்நிலைப் பள்ளியில் சுவர் மற்றும் கேட் மீது ஏறி ஆபத்தான நிலையில் மரக்கிளைகளை
வெட்டும் பணியில் மாணவர்களை ஆசிரியர்கள் ஈடுபடுத்தியது குறித்து நேற்று தினமலர்
நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதன்எதிரொலியாக,
கல்வி அதிகாரி ரேணுகாதேவி பள்ளிக்கு சென்று
விசாரணை நடத்தினார். அப்போது, மின் ஊழியர்கள் ஏற்கனவே மரக்கிளைகளை
வெட்டி சென்றனர். அதில் சில கிளைகள் மட்டும் தொங்கிக் கொண்டிருந்தன. அதை
மாணவர்களே ஆர்வமுடன் முன்வந்து அகற்றினர். யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என தெரிவித்தனர்.
இதையடுத்து, கல்விப் பணி தவிர மாணவர்களை இதுபோன்ற ஆபத்தான பணிகளில் இனி ஈடுபடுத்த கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டார். சம்பவம் தொடர்பான விளக்கக் கடிதமும் பள்ளி சார்பில் அதிகாரிக்கு அளிக்கப்பட்டது.
