தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வாசிப்பு திருவிழா; ’எந்த புத்தகத்தை வாங்குவது’ ?

வாசிப்பு திருவிழா; ’எந்த புத்தகத்தை வாங்குவது’ ?

வாசிப்பு திருவிழா; ’எந்த புத்தகத்தை வாங்குவது’ ?


UPDATED : ஜூன் 04, 2016 12:00 AM

ADDED : ஜூன் 04, 2016 11:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 04, 2016 12:00 AM ADDED : ஜூன் 04, 2016 11:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எந்தெந்தப் புத்தகங்களை வாங்கலாம் என்று யாரிடமும் பரிந்துரை கேட்காதீர்கள்

எந்த எழுத்தாளரைப் படிக்கலாம் என்றும் முன்முடிவுகளோடு இராதீர்கள்

அறியப்பட்ட, புகழப்பட்ட, விருதுபெற்ற, பரிந்துரைக்கப்பட்ட நுால்கள் என்பதற்கும் செவி சாய்க்காதீர்கள்

இவ்வாண்டு முழுக்க, நீங்கள் எந்தப் பொருளில் வாசித்து மேம்பட வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள். எவற்றைக் கற்றறிய விருப்பம் என்று, உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். 

அந்தப் பொருள்களில் எழுதப்பட்ட நல்ல நுால்களைத் தேடிப்பிடித்து வாங்குங்கள் நம் எழுத்தாளர்கள் எப்போதும், தற்கால உரைநடைப் புனைவு இலக்கியம் என்னும் சிறுசட்டிக்குள்ளேயே தங்கள் பட்டியலைச் சமைப்பர்.

இலக்கியம் என்னும் பேராலமரத்தின், 50 கிளைகளில், இது கடைசிக்கிளை என்பதை உணருங்கள். நுாலுலகம் என்னும் கானகத்தில் இலக்கியம் ஓர் ஆலமரம் அவ்வளவுதான். எப்போதும் பிற அறிவுத்துறை நுால்களை நீங்கள் படித்துக்கொண்டே இருக்க வேண்டும். அதுதான் வாசிப்பு, அதுவே அறிவு. புதிதாய் ஒன்றை அறிந்து தேர்ச்சியடைய வேண்டும்.

வரலாறு, பொருளாதாரம், அறிவியல், அரசியல், கணிதம், காட்சியியல், மொழியியல், மரபு, தொன்மம், வானியல் என, எண்ணற்ற பிரிவுகளில் எழுதப்பட்ட அறநுால்களைத் தேடிக் கண்டு அடையுங்கள். அவற்றை வாசியுங்கள்.

தமிழில் பிற அறிவுத்துறை நுால்கள் என்று பார்த்தால், பாடநுால்களுக்கு அப்பால் எழுதப்பட்டவை மிகக்குறைவே. வேறு வழியில்லை, மொழி பெயர்ப்பில் கிடைப்பனவற்றைத் துரத்திப் பிடியுங்கள்.

பங்கு வர்த்தகம் என்னும் பொருளாதாரவியலின் சிறு பிரிவில், தொழில்நுட்பப் பகுப்பாய்வு முறைகள் என்னும் பொருளில் மட்டும் ஆங்கிலத்தில், 10 ஆயிரம் நுால்களுக்கு மேல் வெளியாகியிருக்கின்றன.

அவற்றுள், 3,000 நுால்களை இப்போதே இணையத்தில் பெறலாம். தமிழில் பங்குச் சந்தையைக் குறித்துப் பொருட்படுத்தத்தக்க, 10 நுால்கள் வெளியாகியிருக்குமா? அவ்வளவுதான். இதுதான், தமிழில் பிறதுறை நுால்களின் நிலை.

மருத்துவ நுால்களெல்லாம் ஆங்கிலத்தில் எத்தனை இருக்கக்கூடும், கற்பனை செய்து பாருங்கள். தமிழில் அவற்றுக்கான இடம் எங்கே? இந்தக் கெடுகேட்டில் படிக்க வருகிற பத்தைம்பது, புதிய வாசகர்களை நவீன உரைநடைப் புனைவிலக்கியம் என்னும் குண்டுச் சட்டிக்குள்ளேயே திரியும்படி கழுத்தைப் பிடித்து அழுத்துகின்றனர்; பலியாகாதீர்கள்! உங்கள் ஆர்வமும், அக்கறையும் இப்படியாகவே இருக்கும்படி உங்களை மயக்குகின்றனர். 

எந்நேரமும் தற்காலப் புனைவிலக்கியத் திற்குள்ளேயே உங்கள் வாசிப்பு இருக்குமெனில், தொலைக்காட்சித் தொடர்களில் மூழ்கியவர்களுக்கும், உங்களுக்கும் என்ன வேறுபாடு என்று சிந்தியுங்கள். கவிஞர் மகுடேசுவரன் முகநுால் பக்கத்தில் இருந்து.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us