தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணியில் தொய்வு

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணியில் தொய்வு

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணியில் தொய்வு


UPDATED : ஜூன் 06, 2016 12:00 AM

ADDED : ஜூன் 06, 2016 10:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 06, 2016 12:00 AM ADDED : ஜூன் 06, 2016 10:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி
: தமிழகத்துக்கு இடம் பெயர்ந்துள்ள
, வட மாநில தொழிலாளர்களின் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பை நிறைவு செய்வதில், தொய்வு ஏற்பட்டுள்ளது.

நீலகிரி, வால்பாறை உட்பட தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த பகுதிகளிலும், கோவை, திருப்பூர், சென்னை உட்பட தொழில் நகரங்களிலும், வட மாநில தொழிலாளர்கள் அதிகளவில் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு, தோட்ட மற்றும் கட்டுமான நிர்வாகங்கள் குடியிருப்புகளை ஏற்படுத்தி கொடுக்கின்றன. 

இதில், பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகளை, அருகேயுள்ள பள்ளிகளில் சேர்க்க, சர்வ சிக்ஷ அபியான் (எஸ்.எஸ்.ஏ.,) திட்டம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. கடந்தாண்டு வரை, மாநிலம் முழுக்க, பள்ளி செல்லா வட மாநில குழந்தைகள் கண்டறியப்பட்டு, அரசு ஊராட்சி மற்றும் துவக்கப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். நடப்பாண்டு, பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு பணி, கடந்த ஒரு மாதம் நடந்தது. 

இருப்பினும், நீலகிரி உட்பட பல மாவட்டங்களில், சட்டசபை தேர்தலில் ஓட்டளிக்க, சொந்த ஊர்களுக்கு திரும்பிய வட மாநில குடும்பத்தினரில் பலர், இனியும் திரும்பி வரவில்லை; கணக்கெடுப்பு பணியை முழுமைப்படுத்த முடியாத நிலை, எஸ்.எஸ்.ஏ., அலுவலர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.ஏ., அலுவலர்கள் கூறுகையில், பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு பணி, 95 சதவீதம் முடிந்துவிட்டது. வட மாநில குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பை நிறைவு செய்தால் மட்டுமே, பணி முழுமை பெறும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us