தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இளைஞர்களுக்கு நல்ல நூல்களை அடையாளம் காட்ட வேண்டும்!

இளைஞர்களுக்கு நல்ல நூல்களை அடையாளம் காட்ட வேண்டும்!

இளைஞர்களுக்கு நல்ல நூல்களை அடையாளம் காட்ட வேண்டும்!


UPDATED : ஜூன் 07, 2016 12:00 AM

ADDED : ஜூன் 07, 2016 10:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 07, 2016 12:00 AM ADDED : ஜூன் 07, 2016 10:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நல்ல நுால்களை, இளைஞர்களுக்கு அடையாளம் காட்ட வேண்டிய பொறுப்பு, எழுத்தாளருக்கு உள்ளது என, கவிஞர் வைரமுத்து பேசினார்.

புத்தக காட்சியில் இடம்பெற்றுள்ள, வைரமுத்து பதிப்புலகம் என்ற தன் அரங்கில், வாசகர்கள் மத்தியில் வைரமுத்து பேசியதாவது:

வாசிப்புக்கு தமிழர்கள் சளைத்தவர்கள் அல்ல. தமிழர்களின் வாசிப்பிற்கு, சமுதாயம் வசதி செய்து தர வேண்டும். நல்ல நுால்களை இளைஞர்களுக்கு அடையாளம் காட்ட வேண்டிய பொறுப்பு, எழுத்தாளர்களிடம் உள்ளது. இளைஞர்கள், படிக்க தயங்குபவர்கள், மறுப்பவர்கள் என்ற கூற்றை நாம் உடைக்க வேண்டும். 

ஒரு இளைஞன், 10 முதல் 16 வயது வரை, எதை நோக்கி நகர்கிறானோ அதுவே, அவனது வாழ்க்கையாகிறது. அவனது, ௧௭வது வயதில், அவனுக்கு அரிய நுால்களை அறிமுகம் செய்ய வேண்டும். இளைஞர்கள் இலக்கியம், வரலாறு, தத்துவம் உள்ளிட்ட நுால்களை வாசிக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். தன் அரங்கில் விற்பனையாகும் தன் புத்தகங்களில், அவர் கையொப்பமிட்டு வாசகர்களுக்கு வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us