தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/’ரேங்க்’ பட்டியல் வெளியிட கோரி ஐகோர்ட்டில் வழக்கு

’ரேங்க்’ பட்டியல் வெளியிட கோரி ஐகோர்ட்டில் வழக்கு

’ரேங்க்’ பட்டியல் வெளியிட கோரி ஐகோர்ட்டில் வழக்கு


UPDATED : ஜூன் 15, 2016 12:00 AM

ADDED : ஜூன் 15, 2016 11:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 15, 2016 12:00 AM ADDED : ஜூன் 15, 2016 11:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை
: பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை, அண்ணா பல்கலை வெளியிட கோரிய வழக்கு விசாரணையை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.

கன்னியாகுமரி, கொட்டாரம் வழக்கறிஞர் வைரம் சந்தோஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:

அனைத்து பொறியியல் கல்லூரிகளின் கல்வித்திறன், தேர்ச்சி விகிதத்தை சென்னை அண்ணா பல்கலை வெளியிட்டால் தான், பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்கள், கலந்தாய்வின் போது விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்ய எளிதாக அமையும்.பல்கலை இதை வெளியிட, மாநில அரசு மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலிடம் அனுமதி பெறத் தேவையில். 

ஆனாலும், வெளியிட பல்கலை தயங்குகிறது.கடந்த, 2015ல், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பொறியியல் கல்லூரிகளின் கல்வித்திறன், தேர்ச்சி விகிதம் பற்றி பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதனால், எந்த கல்லூரியில் எந்தெந்த படிப்புகளை தேர்வு செய்வது என, கலந்தாய்வின் போது மாணவர்கள் அறிந்து கொண்டனர்.

மாணவர்களின் நலன் கருதி,பொறியியல் கல்லூரிகளின் பெயர், கோடு எண், தேர்ச்சி விகிதம், பல்கலை அளவில் மாணவர்கள் பெற்ற, ரேங்க் கொண்ட தரவரிசை பட்டியலை, அண்ணா பல்கலை வெளியிட உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு, மனுவில் கூறப்பட்டிருந்தது. நீதிபதிகள் நூட்டி.ராமமோகனராவ், எஸ்.எஸ்.சுந்தர் கொண்ட அமர்வு, விசாரணையை அடுத்த வாரம் ஒத்திவைத்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us