தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சட்ட அமைச்சகத்திடம் பிரச்சினை கிளப்பும் டில்லி பல்கலை

சட்ட அமைச்சகத்திடம் பிரச்சினை கிளப்பும் டில்லி பல்கலை

சட்ட அமைச்சகத்திடம் பிரச்சினை கிளப்பும் டில்லி பல்கலை


UPDATED : அக் 07, 2009 12:00 AM

ADDED : அக் 07, 2009 02:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2009 12:00 AM ADDED : அக் 07, 2009 02:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இது சட்டப் பிரச்சினை. இதை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். சட்ட அமைச்சகம் உரிய ஆலோசனை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோம். டில்லி பல்கலைக்கழகத்தில் இருந்த இந்த இன்ஜினியரிங் கல்லூரி, பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டதில் சரியான நடைமுறை கடைபிடிக்கப்பட்டதா என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறோம் என்று டில்லி பல்கலைக்கழகத் துணைவேந்தர் தீபக் பென்டல் தெரிவித்தார்.


டில்லி பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக இருந்த டில்லி இன்ஜினியரிங் கல்லூரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டது. மத்திய சட்டப்படி டில்லி பல்கலைக்கழகம் இயங்குகிறது.
இப்பிரச்சினை குறித்து பேராசியர் பென்டல், டில்லியின் லெப்டினென்ட் கவர்னர் தேஜேந்திர கன்னாவுக்கு எழுதியிருந்தார். இன்ஜினியரிங் கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றுவது குறித்து மத்திய அமைச்சரவைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அத்துடன் பல்கலைக்கழக விசிட்டரான் குடியரசுத் தலைவரிடமும் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும் என்று பேராசிரியர் பென்டல் தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினையில் ஆசிரியர்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கிறார்கள். சரியான நடைமுறைகளை மத்திய அரசு கடைப்பிடித்துள்ளதா என்பதை அரசிடமிருந்து அறிய விரும்புகிறோம். அவ்வாறான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us