ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பம் வினியோகம்
ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பம் வினியோகம்
UPDATED : அக் 20, 2009 12:00 AM
ADDED : அக் 20, 2009 11:58 AM
தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரிவுரையாளர் நியமிக்கப்பட உள்ளனர். தமிழ் விரிவுரையாளர்கள் 22 பேர், ஆங்கிலம் 25, கணிதம் 23, இயற்பியல் 14, வேதியியல் 17, தாவரவியல் 7, விலங்கியல் 14, வரலாறு 17, புவியியல்8, உடற்கல்வி 8 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
சம்பந்தப்பட்ட பாடங்களில் முதுகலை பட்டமும், கல்வியியலில் எம்.எட்., பட்டமும் பெற்றிருக்க வேண்டும். உடற்கல்வி ஆசிரியர்கள் எம்.பி. எட்., தகுதி பெற்றிருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நேற்று முதல் வினியோகித்து வருகின்றனர். விண்ணப்பத்தின் விலை 500 ரூபாய்.
தாழ்த்தப்பட்டோர், ஆதிதிராவிடர்களுக்கு 250 ரூபாய். ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை என்ற முகவரிக்கு டிராப்ட் பெற்று வழங்கி விண்ணப்பங்களை பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அக்., 30ம் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலகங்களில் வழங்க வேண்டும். இத்தேர்வு டிச., 6ம் தேதி மாநிலம் முழுவதும் 32 மையங்களில் நடக்க உள்ளது.
