பரமக்குடி வேளாண் அதிகாரி ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி
பரமக்குடி வேளாண் அதிகாரி ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி
UPDATED : ஆக 06, 2020 12:00 AM
ADDED : ஆக 06, 2020 08:47 AM
அ நிறம் | அளவு
பரமக்குடி:
பரமக்குடி வேளாண் அலுவலர் அபிநயா 27, ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்று 559 வது இடம் பிடித்துள்ளார்.
கரூர் மாவட்டம் முன்னுார் கிராமம் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர் 2014 கோவை வேளாண் கல்லுாரியில் பி.எஸ்.சி., வேளாண்மை பிரிவில் படித்தார். 2019 மார்ச்சில் பரமக்குடி வேளாண்மை அலுவலராக பணியில் சேர்ந்தார். ஐ.ஏ.எஸ்.,தேர்வில் தொடர்ந்து நான்கு முறை தோல்வி ஏற்பட்டாலும், 5 வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
அபிநயா கூறியதாவது:
அரசுப்பணி கிடைத்தாலும் ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்ற உத்வேகத்துடன் படித்தேன். விவசாயி மகளாக பிறந்த நான் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றது பெருமையாக உள்ளது. தொடர்ந்து விவசாயிகளின் எண்ணங்களை அறிந்து பணியாற்றுவேன், என்றார்.
