தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நோய் பாதிப்பு குறைந்ததும் பள்ளிகள் திறக்கப்படும்: இ.பி.எஸ்.,

நோய் பாதிப்பு குறைந்ததும் பள்ளிகள் திறக்கப்படும்: இ.பி.எஸ்.,

நோய் பாதிப்பு குறைந்ததும் பள்ளிகள் திறக்கப்படும்: இ.பி.எஸ்.,


UPDATED : ஆக 09, 2020 12:00 AM

ADDED : ஆக 09, 2020 05:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 09, 2020 12:00 AM ADDED : ஆக 09, 2020 05:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த, மாவட்ட அளவிலான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை வகித்தார். 
கூட்டத்துக்கு பின், முதல்வர் இ.பி.எஸ்., அளித்த பேட்டி:

காப்பீடு திட்டம் வாயிலாக, அத்தொகையை வழங்க, மத்திய அரசு முன் வந்தது. எனவே, இதர பணியாளர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்து, தற்போது, அதை, 25 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு, இன்னும் மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை. கொரோனா பரவல், உயிர் சம்பந்தப்பட்டது. குழந்தைகள் பாதுகாப்பு முக்கியம். எனவே, நோய் தொற்று குறைந்ததும், பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்
முன்னதாக, ஆய்வு கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது:
தொழிற்சாலைகள், வேளாண் பணிகள், 100 நாள் வேலை திட்ட பணிகள், முழுவீச்சில் செயல்படுகின்றன. நோய் பரவல் படிப்படியாக குறைவதால், மாநகர் பகுதிகளில், சிறு கோவில்கள் திறக்கவும், ஒட்டுனர் பயிற்சி பள்ளி செயல்படவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அரசு வழிமுறைகளை பின்பற்றி, மக்கள் ஒத்துழைப்பு நல்குவதால், மாவட்டத்தில், நோய் தொற்று குறைந்து வருகிறது. இவ்வாறு, முதல்வர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us