தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர் சேர்க்கை அதிகரிக்க மாநகராட்சி குழு அமைப்பு

மாணவர் சேர்க்கை அதிகரிக்க மாநகராட்சி குழு அமைப்பு

மாணவர் சேர்க்கை அதிகரிக்க மாநகராட்சி குழு அமைப்பு


UPDATED : ஆக 20, 2020 12:00 AM

ADDED : ஆக 20, 2020 07:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 20, 2020 12:00 AM ADDED : ஆக 20, 2020 07:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை மாநகராட்சி பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, தலைமை ஆசிரியர் தலைமையில், குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர், நேற்று முதல், வீடு, வீடாக சென்று, மாணவர்களின் விபரங்களை சேகரித்து வருகின்றனர்.
சென்னை மாநகராட்சி, கல்வித்துறையின் கட்டுப்பாட்டில், 281 பள்ளிகள் உள்ளன. மேலும், சென்னை தொடக்க மற்றும் நடுநிலைகளில், 200 மழலையர் வகுப்புகளும் இயங்கி வருகின்றன. இதில், 83 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, மாநகராட்சி சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, தலைமை ஆசிரியர் தலைமையில், ஆசிரியர்களை உறுப்பினர்களாக வைத்து, ஒவ்வொரு பள்ளியிலும், குழு அமைக்கப்பட்டுள்ளது. 
இக்குழுவின் வாயிலாக, ஆசிரியர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில், இடைநிற்றல் மற்றும் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் விபரங்களை, உரிய படிவத்தில் பூர்த்தி செய்கின்றனர். ஒவ்வொரு ஆசிரியரும், தினமும், 50 குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் விபரங்களை சேகரித்து, தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். நேற்று துவங்கிய விபரங்கள் சேகரிப்பு, இம்மாதம், 31ம் தேதி வரை, நடைபெற உள்ளன.இந்த விபரங்களின் அடிப்படையில், இடைநிற்றல் மற்றும் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை, மாநகராட்சி பள்ளிகளில் சேர்ப்பதற்கு, நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி தெரிவித்து உள்ளது. 
இது குறித்து, மாநகராட்சி கமிஷனர், பிரகாஷ் கூறியதாவது:

இந்த கல்வியாண்டில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தலைமையாசிரியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, இடைநிற்றல் மாணவர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. 
ஒவ்வொரு ஆசிரியரும், அப்பகுதிக்குரியமகளிர் சுய உதவிக்குழுவில் இடம்பெற்றுள்ள சமுதாய ஒருங்கிணைப்பாளர்களை இணைத்து, இப்பணிகளை மேற்கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட நடைமுறை செயல்படுத்தும்போது, கொரோனா தொற்று தடுப்பிற்கான அரசின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். இச்செயல்பாடுகளை, உதவி கல்வி அலுவலர்களும், தலைமையாசிரியர்களும் தொடர்ந்து, கண்காணிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us