தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர் பெயர் பட்டியல் திருத்தம் செய்ய வாய்ப்பு

மாணவர் பெயர் பட்டியல் திருத்தம் செய்ய வாய்ப்பு

மாணவர் பெயர் பட்டியல் திருத்தம் செய்ய வாய்ப்பு


UPDATED : ஆக 21, 2020 12:00 AM

ADDED : ஆக 21, 2020 06:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 21, 2020 12:00 AM ADDED : ஆக 21, 2020 06:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:
பத்தாம் வகுப்பு பிளஸ்1, பிளஸ் 2 மாணவர்கள் பெயர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணியை ஆக., 29 வரை மேற்கொள்ள தேர்வுத்துறை வாய்ப்பு அளித்துள்ளது.
அரசு பொது தேர்வு எழுதிய மாணவர்களின் பெயர்பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள பள்ளிகளிலிருந்து கடிதங்கள் தேர்வுத்துறைக்கு சென்றுள்ளன. தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்வதற்குரிய பட்டியலை தலைமை ஆசிரியர்கள் தயார் செய்யவேண்டும். இதில் சந்தேகம் இருப்பின் தேர்வு ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொள்ளலாம்.
தேர்வுத்துறை இணையதளத்தில் சென்று சம்பந்தப்பட்ட பள்ளி &'யூசர்நேம்&', &'பாஸ்வேர்ட்&' கொடுத்து பெயர் பட்டியலில் திருத்தம் செய்யலாம். இதற்கு ஆக.,24 முதல் 29 வரை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அப்பட்டியலில் தலைமை ஆசிரியர் கையெழுத்து, பள்ளி சீல் வைத்து செப்., 1க்குள் தேர்வுத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பவும். அதற்கு பின் திருத்தம் வந்தால், அப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us