தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீட், ஜே.இ.இ., மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

நீட், ஜே.இ.இ., மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

நீட், ஜே.இ.இ., மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு


UPDATED : ஆக 26, 2020 12:00 AM

ADDED : ஆக 26, 2020 08:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 26, 2020 12:00 AM ADDED : ஆக 26, 2020 08:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து, மருத்துவப் படிப்புக்கான, தேசிய தகுதி நுழைவுத் தேர்வான நீட், ஜூலை, 26க்கு தள்ளிவைக்கப்பட்டது. அதேபோல பொறியியல் படிப்புக்கான, ஜே.இ.இ., மெயின் நுழைவுத் தேர்வு, ஜூலை, 18 முதல், 23 வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், நுழைவுத் தேர்வுகள், மீண்டும் தள்ளிவைக்கப்பட்டன.
திட்டமிட்டபடி தேர்வுகள்

செப்டம்பர், 1 மற்றும் 6ம் தேதிகளில் ஜே.இ.இ., மெயின் நுழைவுத் தேர்வும்; செப்., 27ல், ஜே.இ.இ., அட்வான்ஸ் தேர்வும்; செப்., 13ல், நீட் தேர்வும் நடத்தப்படும் என, தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்திருந்தது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால், தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும் என, மாணவர்களும், அரசியல் தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனினும், திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என, என்.டி.ஏ., எனப்படும், தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. 
தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் எனக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவும், கடந்த வாரத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், தேர்வுகளை எழுதும் மாணவ - மாணவியர், பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை, தேசிய தேர்வுகள் முகமை நேற்று வெளியிட்டது. 
அதன் விபரம்:

தேர்வு எழுத வரும் மாணவர்கள் அனைவரும், கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும். வீட்டில் இருந்தே, குடிநீர் பாட்டில், &'சானிடைசர்&' ஆகியவை எடுத்து வர வேண்டும். மாணவர்கள் தேர்வு மையத்தை அடைந்ததும், முக கவசத்தை கழற்றிவிட்டு, தேர்வு மையத்தில் தரப்படும், புதிய முக கவசத்தை அணிந்து கொள்ள வேண்டும். தேர்வு மையத்திற்குள், தண்ணீர் பாட்டில், சானிடைசர் மற்றும் &'அட்மிட் கார்டு&' எனப்படும் அனுமதி சீட்டு தவிர, வேறெதுவும் அனுமதிக்கப்படாது.
தேர்வு எழுதும் போது, முக கவசம் மற்றும் கையுறைகளை கட்டாயம் அணிய வேண்டும் என்ற அவசியமில்லை. தேர்வு மைய வாயிலில், கூட்டத்தை தவிர்க்கும் பொருட்டு, மாணவர்களின் வருகைக்கான நேரம், முன்பே தெரிவிக்கப்படும். அந்த நேரத்தில் மட்டுமே, அவர்கள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும்.அனுமதி சீட்டு மற்றும் எஸ்.எம்.எஸ்., வாயிலாக, தேர்வு மைய வருகைக்கான நேரம் குறித்த தகவல் தெரிவிக்கப்படும். 
மாணவர்கள் தங்களுக்குள் குறைந்தபட்சம், 6 அடி இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். உடல் வெப்பநிலை, 99.4 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு அதிகமாக இருந்தால், சம்பந்தப்பட்ட மாணவர்கள், தனி அறைக்கு அழைத்து செல்லப்படுவர். அங்கு, அவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின், 15 அல்லது 20 நிமிடங்களுக்கு பின், மீண்டும் உடல் வெப்பம் பரிசோதிக்கப்படும். அப்போதும், உடல் வெப்பநிலை குறையவில்லை எனில், அவர்கள் தனி அறையில், தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
மாணவர்களை பரிசோதிப்பது, ஆவணங்களை சரி பார்ப்பது உள்ளிட்ட பணிகள், பதிவு அறையில் செய்யப்படும். அப்போது, அனுமதி சீட்டு, அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை, மாணவர்கள் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த நடைமுறைக்கு பின், தேர்வு எழுத வேண்டிய அறை எண் குறித்து, மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும். கண்காணிப்புதேர்வு அறைக்குள் நுழைவதற்கு முன், கைகளை சோப்பு போட்டு கழுவி, சானிடைசரால் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். சோப்பு மற்றும் சானிடைசர்கள், தேர்வு மையத்தில் பல்வேறு இடங்களிலும், உபயோகத்திற்கு வைக்கப்பட்டு இருக்கும்.
தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடுவோரில், 50 சதவீதம் பேர், தேர்வு அறைக்குள் இருப்பர். மீதியுள்ள, 50 சதவீதம் பேர், கடைசி மாணவர் தேர்வு அறைக்குள் செல்லும் வரை, மையத்தின் வெளிப்புறம், பதிவு அலுவலகம், தேர்வு அறைக்கு வெளிப்பகுதி உள்ளிட்ட இடங்களை, கண்காணிக்கும் பணியில் ஈடுபடுவர். தேர்வு முடிந்ததும், ஒவ்வொருவராக தனித்தனியே வெளியேற அனுமதிக்கப்படுவர். முக கவசம் மற்றும் கையுறைகளை, தேர்வு அறைக்கு வெளியே வைக்கப்பட்டு இருக்கும் குப்பை தொட்டியில் மட்டுமே போட வேண்டும்.
வெளியேறும் போது, போதிய இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும். அதை கண்காணிக்க, தன்னார்வலர்கள் பணியில் இருப்பர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
தேர்வுகள் நடத்த கிரேட்டா எதிர்ப்பு

ஐரோப்பிய நாடான, சுவீடனைச் சேர்ந்தவர், கிரேட்டா தன்பர்க், 17. இவர், சர்வதேச அளவில், பருவநிலை மாற்றத்துக்காக போராடி வருகிறார். இந்நிலையில், நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து, தன் கருத்தை, &'டுவிட்டர்&' பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

அதில் குறிப்பிட்டுள்ளதாவது:

இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், கடுமையான வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தலும், குறையவில்லை. இந்த நேரத்தில், மாணவர்களுக்கு நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகள் நடத்தப்படுவதில், துளியும் நியாயமில்லை. இந்த தேர்வுகள், ஒத்தி வைக்கப்பட வேண்டும். இவ்வாறு, அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us