தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆன்லைன் வழிக் கல்வி குறித்த புகார்களை தெரிவிக்கலாம்

ஆன்லைன் வழிக் கல்வி குறித்த புகார்களை தெரிவிக்கலாம்

ஆன்லைன் வழிக் கல்வி குறித்த புகார்களை தெரிவிக்கலாம்


UPDATED : செப் 07, 2020 12:00 AM

ADDED : செப் 07, 2020 09:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 07, 2020 12:00 AM ADDED : செப் 07, 2020 09:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அனைத்து பள்ளிகளிலும், &'ஆன்லைன்&' வகுப்புகளை கண்காணிக்க, ஆலோசகர்கள் நியமிக்கப்பட வேண்டும். அவர்கள், &'ஆன்லைன்&' வகுப்பு குறித்த விபரங்களை, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். பள்ளிகளில், ஆன்லைன் வகுப்புகள் துவக்கப்பட்ட தேதி, ஆலோசகர் பெயர், பதவி, தொடர்பு எண், &'இ- மெயில்&' முகவரி போன்ற விபரங்களை பெற வேண்டும். அவர்களுடன், முதன்மைக் கல்விஅலுவலர்கள் தொடர்பில் இருக்க வேண்டும்.
ஆன்லைன் வகுப்பு தொடர்பாக, புகார்கள் வருகிறதா என, கண்காணிக்க வேண்டும். ஆன்லைன் வகுப்பு ஆலோசகர்கள் குறித்த விபரங்களை, பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். பள்ளி இணையதளத்திலும், அறிவிப்பு பலகையிலும் வெளியிட வேண்டும்.ஆன்லைன் வகுப்புகளுக்கு, வருகைப் பதிவேடு அல்லது மதிப்பெண்கள் கணக்கிடுவது கூடாது.
புகார் தெரிவிக்கலாம்

ஆன்லைன் வகுப்புகளுக்கு, எக்காரணம் கொண்டும், மாணவர்களை வற்புறுத்தக் கூடாது; அது கட்டாயமல்ல. இணைய வழிக் கல்வி தொடர்பான புகார்களை, மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின், grievanceredressaltnpta@gmail.com என்ற, இ - மெயில் முகவரிக்கு, பெற்றோர் அனுப்பலாம். 
அந்த புகார்கள், உரிய நடவடிக்கைக்காக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்படும்.மாணவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்கான கவுன்சிலிங் பெற, &'14417&' என்ற, எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்விபரங்களை, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us