தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஒப்பற்ற இலக்கியம் திருக்குறள் குவைத் கவிஞர் புகழாரம்

ஒப்பற்ற இலக்கியம் திருக்குறள் குவைத் கவிஞர் புகழாரம்

ஒப்பற்ற இலக்கியம் திருக்குறள் குவைத் கவிஞர் புகழாரம்


UPDATED : செப் 10, 2020 12:00 AM

ADDED : செப் 10, 2020 07:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 10, 2020 12:00 AM ADDED : செப் 10, 2020 07:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
உலகின் ஒப்பற்ற இலக்கியம் திருக்குறள், என, குவைத் கவிஞர், சாலிம் அல்-ருமைதி புகழாரம் சூட்டினார்.
சென்னை பல்கலையின் அரபுத் துறை பேராசிரியர் ஜாகீர் உசேன், அரபு மொழியில் மொழி பெயர்த்த திருக்குறள் நுால், இணைய வழியாக வெளியிடப்பட்டது. நுாலை, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் வெளியிட, குவைத் கவிஞர் சாலிம் அல்-ருமைதி, முதல் பிரதியை பெற்றார்.
நுாலைப் பெற்ற கவிஞர் சாலிம் அல்-ருமைதி பேசியதாவது:


உலகின் ஒப்பற்ற இலக்கியமாக வும், கவிதை உலகில் மதிப்புமிக்க மாணிக்கமாகவும் திருக்குறள் விளங்குகிறது. அதில், ஆழமான கருத்துக்கள், அறிவு சார்ந்த சிந்தனைகள், தத்துவம், அறநெறிகள் மிகுந்துள்ளன. இது, திருக்குர் ஆன் உள்ளிட்ட வேதங்களுக்கு இணையான கருத்துக்களை கொண்டுள்ளது. அரேபிய பழமொழிகள், கவிதைகள் மற்றும் பிளேட்டோவின் தத்துவங்களையும் நினைவுபடுத்துகிறது. இரு உலக வாழ்க்கைக்கும், இந்நுால் வழிகாட்டுகிறது.
தமிழிலிருந்து நேரடியாக அரபியில் மொழியாக்கம் செய்யப்பட்ட, முதல் இலக்கியம் திருக்குறள் என்ற பெருமையும், சவுதி அரேபியாவில் அரங்கேற்றப்பட்ட, முதல் இந்திய இலக்கியம் என்ற பெருமையும் திருக்குறளுக்கு உண்டு. இவ்வாறு, அவர் பேசினார்.
அமைச்சர் பாண்டியராஜன் பேசுகையில், &'&'தமிழுடன் பின்னிப் பிணைந்த மொழி அரபு. இவை இரண்டுக்கும், இசைமொழி என்ற, அடைமொழி உண்டு. &'&'உலகில், 33 கோடி பேர் பேசும் அரபு மொழியில், திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. இந்திய துாதரகங்கள் வாயிலாக, அரபு நாடுகளில் சேர்க்கும் பணியை, தமிழக அரசு செய்யும்,&'&' என்றார்.
நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி துறையின் இயக்குனர் விசயராகவன், உலகத் தமிழ்ச் சங்க இயக்குனர் அன்புச்செழியன், நடிகர் நாசர், வி.ஜி.பி.சந்தோசம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.வேல்ஸ் பல்கலை பேராசிரியர் பன்னிருகை வடிவேல், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us