தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியிட பட்டியல் வெளியீடு

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியிட பட்டியல் வெளியீடு

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியிட பட்டியல் வெளியீடு


UPDATED : அக் 27, 2009 12:00 AM

ADDED : அக் 27, 2009 03:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2009 12:00 AM ADDED : அக் 27, 2009 03:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வேலைவாய்ப்பகத்தால் பரிந்துரை செய்யப்பட்ட நபர்களை, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைத்தல் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு 200708 மற்றும் 200809 ஆண்டுகளில் உள்ள நியமனங்களில் நிரப்பப்பட்டது போக மீதி காலியிடங்கள் 1,742 என அறியப்பட்டுள்ளது.


இப்பணியிடங்களுக்கு தகுதியுடைய நபர்களை 1:5 என்ற அடிப்படையில் வேலைவாய்ப்பகத்தால் பரிந்துரை செய்யப்பட்டு பட்டியலில் இடம்பெற்றுள்ள 6,504 நபர்களுக்கு தமிழகம் முழுதும் உள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நவம்பர் 2 மற்றும் 3ம் தேதியில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட நபர்களின் விவரம், சான்றிதழ் சரிபார்ப்பிற்கான நாள், மையம் மற்றும் வரையறுக்கப்பட்ட இறுதித் தேதி ஆகிய விவரங்களை இவ்வாரிய இணையதளம் http://trp.tn.nic.in மூலம் தெரிந்து கொள்ளலாம். சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்புக் கடிதங்கள் வேலைவாய்ப்பகத்தால் பரிந்துரை செய்யப்பட்ட நபர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 
அழைப்புக் கடிதம் பெறப்படவில்லையெனில், இவ்வாரிய இணைய தள வெளியீட்டில் அவரது பெயர் இடம்பெற்றுள்ள விவரங்களை அச்செடுத்து அதிலுள்ள விவரங்களின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us