தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நல்லாசிரியர் விருதுகள் அறிவிக்கப்படுமா? காலதாமதத்தால் ஆசிரியர்கள் ஏமாற்றம்

நல்லாசிரியர் விருதுகள் அறிவிக்கப்படுமா? காலதாமதத்தால் ஆசிரியர்கள் ஏமாற்றம்

நல்லாசிரியர் விருதுகள் அறிவிக்கப்படுமா? காலதாமதத்தால் ஆசிரியர்கள் ஏமாற்றம்


UPDATED : அக் 02, 2020 12:00 AM

ADDED : அக் 02, 2020 06:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2020 12:00 AM ADDED : அக் 02, 2020 06:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
அக். 2-நல்லாசிரியர் விருதுகள் அறிவிக்கப்படாததால், ஆசிரியர்கள்ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ம் தேதியன்று ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆசிரியர் தின விழாவில், சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதும், சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசும் வழங்கி கவுரவிப்பது வழக்கம். டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு 4 பேர், முதல்வரின் சிறப்பு விருதுக்கு 6 பேர், கல்வி அமைச்சரின் வட்டார விருதுக்கு 10 பேர் என, பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 20 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்.இதற்காக ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படும்.
தொடர்ந்து, ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு, தங்களது பணிகள், சாதனைகள் குறித்து தேர்வுக் குழுவினர் முன்பாக விளக்க வேண்டும். இதனடிப்படையில், விருதுக்குரிய ஆசிரியர்களை, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளை கொண்ட தேர்வு குழுவினர் தேர்வு செய்து அறிவிப்பது வழக்கம். இந்தாண்டு கொரோனா நெருக்கடி காரணமாக ஆசிரியர் தின விழா நடக்கவில்லை. இருந்தபோதும், ஆசிரியர்களிடம் இருந்து விருதுக்கு விண்ணப்பங்கள் பெற்றப்பட்டது.
ஆசிரியர்களை அழைத்து அவர்கள் செய்துள்ள பணிகள், சாதனைகள் குறித்து அதிகாரிகள் நேரில் கேட்டறிந்தனர்.அதன் அடிப்படையில் நல்லாசிரியர் விருதுக்கான பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஒரு மாத காலமாகியும் விருது பட்டியல் வெளியிடப்படவில்லை. இதனால், ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நல்லாசிரியர் விருதுகளை உடனடியாக அறிவிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us