தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ உயர் படிப்பில் இடஒதுக்கீடு: ஸ்டாலின் வலியுறுத்தல்

மருத்துவ உயர் படிப்பில் இடஒதுக்கீடு: ஸ்டாலின் வலியுறுத்தல்

மருத்துவ உயர் படிப்பில் இடஒதுக்கீடு: ஸ்டாலின் வலியுறுத்தல்


UPDATED : நவ 02, 2020 12:00 AM

ADDED : நவ 02, 2020 09:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2020 12:00 AM ADDED : நவ 02, 2020 09:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
&'மருத்துவ உயர் சிறப்பு படிப்புகளில், 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என, உயர் நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்துள்ள கருத்தை திரும்பப் பெற வேண்டும்&' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:

மருத்துவ உயர் சிறப்பு படிப்புகளில், அரசு டாக்டர்களுக்கு, 2016ம் ஆண்டுக்கு முன்பிருந்த இடஒதுக்கீட்டு முறையில், இந்தக் கல்வியாண்டில், இடங்கள் வழங்க வேண்டும்.இக்கோரிக்கையை, தமிழ்நாடு டாக்டர்கள் சங்கத்தின் வாயிலாக, ஏற்கனவே, அ.தி.மு.க., அரசுக்கு வலியுறுத்தியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், அகில இந்திய தொகுப்பு முறையை, மருத்துவப் படிப்புகளில் ரத்து செய்து, தமிழக மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள அனைத்து இடங்களும், தமிழக மாணவர்களுக்கு பயன்படும் விதமாக, வழி வகை செய்யப்படும்.
மருத்துவ உயர் சிறப்பு படிப்புகளில், அரசு டாக்டர்களுக்கான, 50 சதவீதம் உள்ஒதுக்கீடு உரிமையை, முதல்வர் பழனிசாமி மீட்டெடுக்காமல், மத்திய அரசுடன் இணக்கமாக பயந்து செல்வது ஏன்?அரசு டாக்டர்களுக்கு, 2016க்கு முன் வரை, தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த, 50 சதவீத இட ஒதுக்கீட்டை, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி, மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
மருத்துவ உயர் சிறப்பு படிப்புகளிலும், இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மருத்துவ உயர் சிறப்பு படிப்புகளில், இட ஒதுக்கீடு வழங்க முடியாது என, உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.இது, சமூகநீதியின் குரல்வளையை நெரிக்கும் முயற்சி. அந்த நிலைப்பாட்டை, மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us