UPDATED : நவ 04, 2020 12:00 AM
ADDED : நவ 04, 2020 09:23 AM
கோவை மாவட்டத்தில் பல்வேறு பள்ளி, கல்லுாரிகளில் தற்காலிகமாக துவக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையங்கள் மூடப்படுகின்றன.
கலெக்டர் ராஜாமணி கூறியதாவது:
கொரோனா தொற்று விகிதம், 5.3 சதவீதமாக குறைந்துள்ளது. கோவையில் தற்போது, 1,700 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில், 1,300 பேர் மாநகராட்சி பகுதிகளை சார்ந்தவர்கள். கொடிசியாவில், 800 படுக்கைகள் வரைகாலியாக உள்ளன. மேலும், இ.எஸ்.ஐ., அரசு தலைமைமருத்துவமனை உள்ளிட்ட இடங்களிலும் அதிகளவு காலி படுக்கைகள் உள்ளன.
பாதிப்பு குறைந்துவருவதால், கல்வி நிலையங்களில் செயல்படும் சிகிச்சை மையங்கள் மூடப்படவுள்ளன. பெண்கள் பிரத்யேக சிகிச்சைக்கு துவங்கப்பட்ட, காளப்பட்டி மையமும் மூடப்படவுள்ளது. இங்கு சிகிச்சையில் உள்ளவர்கள் கொடிசியாவுக்கு மாற்றப்படுவர். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
