தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ பல்கலை சான்று இணைய வழியில் பெறலாம்

மருத்துவ பல்கலை சான்று இணைய வழியில் பெறலாம்

மருத்துவ பல்கலை சான்று இணைய வழியில் பெறலாம்


UPDATED : நவ 14, 2020 12:00 AM

ADDED : நவ 14, 2020 10:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2020 12:00 AM ADDED : நவ 14, 2020 10:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், தங்களது பள்ளி கல்வியை, மாநில பாடத்திட்டத்தில் பயிலாத பட்சத்தில், மருத்துவ படிப்புகளில் சேர தகுதியானவர்கள் என்பதை ஆய்வு செய்து, சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இதற்காக, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கு நேரில் சென்று, தங்களது ஆவணங்களை சமர்பித்து, தகுதி சான்றுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக, சான்றிதழ் பெற வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, பல்கலை துணை வேந்தர், சுதா சேஷய்யன் கூறியதாவது:


பல்கலை தகுதி சான்றிதழ் பெற, ஒரே நேரத்தில் ஏராளமான மாணவர்கள் குவிகின்றனர். இதனால், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றுவதில் சிக்கல் ஏற்படுகிறது. தற்போது வரை, தகுதி சான்றிதழ் கோரி, 10 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.
இவை அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு, அடுத்த சில மணி நேரங்களில், சம்பந்தப்பட்டவரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப் படும். இதுவரை, 9,500 பேருக்கு தகுதி சான்றிதழ் வழங்கப் பட்டு உள்ளது. இதேபோன்று, விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு தகுதி சான்றிதழ் இணைய வழியாக அனுப்பப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us