தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காவலர் பணி தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு

காவலர் பணி தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு

காவலர் பணி தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு


UPDATED : நவ 30, 2020 12:00 AM

ADDED : நவ 30, 2020 08:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 30, 2020 12:00 AM ADDED : நவ 30, 2020 08:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை;
தமிழக காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறைகளுக்கு, 10 ஆயிரத்து, 906 இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்வதற்கான, எழுத்து தேர்வுக்கு, &'ஹால் டிக்கெட்&' வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக, காவல் துறை, சிறை மற்றும் தீயணைப்பு துறைகளில் காலியாக உள்ள, இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் எஸ்.ஐ.,க்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.அந்த வகையில், இந்த ஆண்டு காவல் துறையில், மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை பிரிவுக்கு, ஆண்கள், 685; பெண்கள் மற்றும் திருநங்கையர், 3,099 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சிறப்பு காவல் படை பிரிவுக்கு, 6,545; சிறைத்துறைக்கு, ஏழு பெண்கள், 112 ஆண்கள் என, 119; தீயணைப்பு துறைக்கு, 458 ஆண்கள் என, 10 ஆயிரத்து, 906 இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை, சீருடை பணியாளர் தேர்வு குழுமம், செப்.,17ல் வெளியிட்டது. 
இப்பணிகளுக்கு, www.tnusrbonline.org என்ற, இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டது. அதன்படி, மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு, 37 மாவட்ட தேர்வு மையங்களில், டிச., 13ல், எழுத்து தேர்வு நடக்கிறது. இதற்கான, &'ஹால் டிக்கெட்&' சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள், &'ஆன்லைன்&' வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, தேர்வு குழும அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us