தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசியல் தலையீட்டை ஒழித்தார்: சுரப்பாவுக்கு ஆதரவாக கடிதம்

அரசியல் தலையீட்டை ஒழித்தார்: சுரப்பாவுக்கு ஆதரவாக கடிதம்

அரசியல் தலையீட்டை ஒழித்தார்: சுரப்பாவுக்கு ஆதரவாக கடிதம்


UPDATED : டிச 11, 2020 12:00 AM

ADDED : டிச 11, 2020 01:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 11, 2020 12:00 AM ADDED : டிச 11, 2020 01:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
துணை வேந்தர் சுரப்பாவின் நிர்வாக காலத்தில் ஊழல் குறைந்து அரசியல்வாதிகளின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக விசாரணை ஆணையத்துக்கு அண்ணா பல்கலை பேராசிரியர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
அண்ணா பல்கலையின் துணை வேந்தர் சுரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டு அதுபற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுரப்பாவின் நிர்வாக செயல்பாடுகளை பாராட்டி ஏ.யூ.டி.ஏ. என்ற அண்ணா பல்கலை பேராசிரியர் சங்கம் சார்பில் அதன் தலைவர் அருள்அறம் செயலர் சந்திரமோகன் ஆகியோர் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அதன் விபரம்:

* தேர்வுகளில் மதிப்பெண்களுக்கு பணம் வாங்கும் கலாச்சாரத்தை துணை வேந்தர் சுரப்பாவின் நிர்வாகம் ஒழித்து கட்டியது. நிர்வாக பணிகளில் இடைத்தரகர்கள் தலையிட்டனர். துணை வேந்தர் மற்றும் பதிவாளர் அலுவலகங்களில் இடைத்தரகர்கள் முகாமிட்டு வந்தனர். இந்த மோசமான நடைமுறையை அறவே நீக்கி லஞ்ச ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்
* துறை தலைவர் மைய இயக்குனர்கள் மற்ற நிர்வாக பதவிகள் விலைக்கு விற்கப்படவில்லை. முறையான விதிகளை பின்பற்றி பேராசிரியர்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்படுகின்றன. துணை வேந்தரின் அலுவலகத்திற்கோ அவரது இல்லத்திற்கோ அரசியல்வாதிகள் வந்து செல்வது அறவே நிறுத்தப்பட்டது
* அனைத்து இளநிலை முதுநிலை படிப்புகளுக்கும் அகில இந்திய கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ. அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. தேசிய தர அங்கீகார அமைப்பான என்.பி.ஏ. அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளது
* தேசிய அளவிலான &'கேட்&' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்று முதுநிலை படிப்பில் சேர்ந்த மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விதிகளை முறைப்படுத்தியதால் பிஎச்.டி. ஆராய்ச்சி படிப்பிற்கான தரம் உயர்ந்துள்ளது
* பட்டமளிப்பு விழாவுக்கான ஆடம்பர செலவுகள் குறைக்கப்பட்டுள்ளன. முதலிடம் பெறும் மாணவர்களுக்கு உண்மையான தங்க பதக்கம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச தரவரிசையில் பல்கலையின் தரம் உயர்ந்துள்ளது
* இதன் அடிப்படையில் சுரப்பாவின் நிர்வாக காலத்தில் ஊழல் இருக்கிறதா அல்லது அதற்கு முன் இருந்ததா என்பதை ஆணையம் விசாரித்து கொள்ளலாம். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us