தமிழில் வேதாந்தம் கற்பிக்கிறார் சுவாமி சதேவானந்தா சரஸ்வதி
தமிழில் வேதாந்தம் கற்பிக்கிறார் சுவாமி சதேவானந்தா சரஸ்வதி
UPDATED : டிச 14, 2020 12:00 AM
ADDED : டிச 14, 2020 10:25 PM
சென்னை:
வாழ்வின் எதார்த்த நிலையை சொல்லும் வேதாந்த கருத்துக்களை, எளிய தமிழில் விளக்க, சுவாமி சதேவானந்தா சரஸ்வதி அடுத்த மாதம், சென்னை வருகிறார். ஜன., 30 முதல், பிப்., 4 வரை வேதாந்த வகுப்புகள் நடக்க உள்ளன.
தமிழகத்தில் பிறந்து, ரிஷிகேஷில் ஆன்மிக சாதனைகள் செய்து, வேதாந்தம் பயின்று, முறைப்படி சன்னியாச தீட்சை பெற்றவர் சுவாமி சதேவானந்தா சரஸ்வதி. இதுவரை, வேதாந்தங்களை கற்பிப்போர், ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளில் தான் கற்பித்தனர். இது, வேதாந்த கருத்துக்களை அறிய விரும்பிய தமிழர்களுக்கு குறையாகவே இருந்தது.
அதை போக்கும் வகையில், தமிழரான சுவாமி சதேவானந்தா சரஸ்வதி, பகவத் கீதை, 10 உபநிஷத்துக்கள், பிரம்மசூத்திரம் உள்ளிட்டவற்றில் உள்ள வேதாந்த கருத்துக்களை, அடுத்தாண்டு ஜன., 30 முதல் பிப்., 4 வரை சென்னை, கிழக்கு கடற்கரை சாலை, உத்தண்டி ஆசிரமத்தில், அறிமுக வகுப்புகளாக நடத்த உள்ளார்.இதில், இன்ப, துன்பங்களுக்கான காரணங்கள், இன்பத்தில் மயங்காமல், துன்பத்தில் கலங்காமல், சமநிலையுடன் வாழ்வை எதிர்கொள்ளும் வழிமுறைகள், அதற்கான நம்பிக்கை, தைரியம் உள்ளிட்ட மனம் சார்ந்த விஷயங்களை விளக்க உள்ளார்.
இந்த ஆன்மிக முகாமில் பங்கேற்க விரும்புவோருக்கு, உணவு, இருப்பிடம் வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளோர், இம்மாதத்துக்குள் பெயர் பதிவு செய்துகொள்ள வேண்டும். வகுப்புகள் குறித்தும், கட்டணம் குறித்தும், மேலும் விபரங்கள் அறிய, 99160 33230 என்ற, மொபைல் போன் எண்ணில் அழைக்கலாம்; sri.ssssp@gmail.com என்ற, மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
