தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு கல்லூரியில் ஷிப்ட் வகுப்புகள்: மாணவர்கள் கவலை

அரசு கல்லூரியில் ஷிப்ட் வகுப்புகள்: மாணவர்கள் கவலை

அரசு கல்லூரியில் ஷிப்ட் வகுப்புகள்: மாணவர்கள் கவலை


UPDATED : நவ 05, 2009 12:00 AM

ADDED : நவ 05, 2009 12:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2009 12:00 AM ADDED : நவ 05, 2009 12:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு


வால்பாறையில் 2006ல் பாரதியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவக்கப்பட்டது. பல்வேறு பாடப்பிரிவுகளில் 1147 மாணவர்கள் படிக்கின்றனர். கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டும் பணி நடப்பதால் வால்பாறையிலிருந்து 10 கி.மீ., தொலைவில் உள்ள சின்கோனா (டேன்டீ) மருத்துவமனை கட்டடத்தில் செயல்படுகிறது.


ஆறு வகுப்பறைகள் எம்.எல்.ஏ., கோவைதங்கம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்துகட்டப்பட்டது. ஆகஸ்ட்டில் துணை முதல்வர் ஸ்டாலின் கல்லூரி புதிய கட்டடத்தை திறந்து வைத்து, 2.5 கோடி ரூபாயுக்கு கல்லூரிக்கு கூடுதல் கட்டடம் கட்டப்படும் என்றார்.தற்போது, ஆறு புதிய வகுப்பறையில் ஒரு பிரிவு மாணவர்களும், மீதமுள்ள மாணவர்கள் சின்கோனாவிலும் படிக்கின்றனர்.

இரு பகுதிகளிலும் ஷிப்ட் முறையில் வகுப்புக்கள் நடக்கின்றன.எனவே, 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான கூடுதல் கட்டடம் கட்டும் பணி விரைவில் நிறைவடைந்தால் மட்டுமே கல்வியின் தரம் நன்றாகயிருக்கும் என மாணவர்கள் கவலையுடன் கூறுகின்றனர்.


அரசு கலைக்கல்லூரி முதல்வர் மதிவாணனிடம் கேட்ட போது, கல்லூரிக்கு 2.5 கோடி ரூபாய் மதிப்பில் வகுப்பறை கட்டும் பணி நடக்கிறது. நமக்கு நாமே திட்டத்தில் நான்கு புதிய வகுப்பறைகள் கட்டப்படவுள்ளன. கட்டடம் முழுமையாக கட்டியபின் ஒரே இடத்தில் கல்லூரி செயல்படும். வகுப்பறை இல்லாததால் தற்போது ஷிப்ட் முறையில் மாணவர்களுக்கு வகுப்புக்கள் நடக்கிறது என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us