தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வி.ஐ.டி., பல்கலை முன்னணி நிறுவனங்களில் பணி ஆணை

வி.ஐ.டி., பல்கலை முன்னணி நிறுவனங்களில் பணி ஆணை

வி.ஐ.டி., பல்கலை முன்னணி நிறுவனங்களில் பணி ஆணை


UPDATED : டிச 22, 2020 12:00 AM

ADDED : டிச 22, 2020 12:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 22, 2020 12:00 AM ADDED : டிச 22, 2020 12:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை;
வி.ஐ.டி., பல்கலையில் பயின்ற, 7,403 பேருக்கு, பிரபலமான, 382 நிறுவனங்கள் பணி நியமன ஆணை வழங்கின.
இது குறித்து, வி.ஐ.டி., பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


வி.ஐ.டி., பல்கலையில் பயிலும் மாணவர்களுக்கான, வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. &'காக்னிசென்ட், இன்போசிஸ் மற்றும் டி.சி.எஸ்.,&' நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கான, &'ஆன்லைன்&' தேர்வு நடந்தது. இதில், வேலுார், சென்னை மட்டுமல்லாது, ஆந்திரா மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள, வி.ஐ.டி., பல்கலையில் பயின்ற மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.தேர்வு முடிவுகளை, வி.ஐ.டி., பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் வெளியிட்டார்.இதில், காக்னிசென்ட் நிறுவனம், 1,418 பேருக்கு; டி.சி.எஸ்., 1,321 பேருக்கு; இன்போசிஸ், 778 பேருக்கு, பணி ஆணை வழங்கியது. 
இந்த நிறுவனங்கள், தேசிய அளவில், வி.ஐ.டி., பல்கலைக்கு தான், அதிக வேலை வாய்ப்பு வழங்கியது, குறிப்பிடத்தக்கது.மேலும், &'விர்டுசா, எக்ஸ்வேர், கேப் ஜெமினி மற்றும் மைண்ட் ட்ரீ&' ஆகிய நிறுவனங்களும், அதிக வேலை வாய்ப்புகள் வழங்கி உள்ளன. மொத்தம், 382 நிறுவனங்கள் வேலைவாய்ப்பு தேர்வு நடத்தியதில், 7,403 வேலை வாய்ப்புகள், வி.ஐ.டி.,க்கு கிடைத்தது. இதற்கு முன், டி.சி.எஸ்., நிறுவனம், 224 பேருக்கு, ஆண்டுக்கு, 7 லட்சம் ரூபாய் ஊதியத்திலும்; விப்ரோ நிறுவனம், 419 பேருக்கு, ஆண்டுக்கு, 6.50 லட்சம் ரூபாய் ஊதியத்திலும் பணி வழங்கியது.
வி.ஐ.டி.,யில் பயின்ற அதிகமான மாணவ - மாணவியருக்கு பணி வழங்கியதற்காக, விப்ரோ நிறுவனம், &'லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்&' புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. வி.ஐ.டி., நிறுவனம், 10 முறை இடம்பெற்று உள்ளது. கடந்த, மே மாதம் முதல், முதுகலை மாணவ - மாணவியருக்கான வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் நடக்கிறது. இதுவரை, 144 முன்னணி நிறுவனங்கள், தேர்வு நடத்தி, 1,028 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கியது.
அதேபோல், &'இன்டெல், நோக்கியா&' நிறுவனங்கள், 100 பேருக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கியது. இந்த கல்வியாண்டில், படிப்பு முடிக்கும் மாணவ - மாணவியருக்கு, ஜூலை முதல், வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இதில், &'மைக்ரோசாப்ட், அமேசான், பேபால், டி.இ.சா இந்தியா பி.லிட்., மோர்கன் ஸ்டான்லி, ஆப்டைனமிக்ஸ், உடான், வொர்க் இந்தியா, சிஸ்கோ. 
மேலும், பஜாஜ் ஆட்டோ, செல், சொசைட்டி ஜென்ரல், ஆப்டம், வால்மார்ட் லேப்ஸ், கிளவுட் இரா, அமாடியுஸ்லேப்ஸ், ஆப்பிள் மற்றும் வெல்பார்கோ&' ஆகிய நிறுவனங்கள், வேலை வாய்ப்பு வழங்கின. மைக்ரோசாப்ட் நிறுவனம், ஏழு பேருக்கு, ஆண்டுக்கு, 44 லட்சம் ரூபாய் ஊதியத்தில் பணி வழங்கியது. வி.ஐ.டி., வேலைவாய்ப்பு முகாம், வரும் மே மாதம் இறுதி வரை நடைபெறும். மாணவர்கள் திறன் அறிந்து, பணி வழங்கிய நிறுவனங்களுக்கு, துணைவேந்தர் விஸ்வநாதன் நன்றி கூறினார். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us