பள்ளி திறப்பு நடவடிக்கை: கண்காணிப்பு அலுவலர் நியமனம்
பள்ளி திறப்பு நடவடிக்கை: கண்காணிப்பு அலுவலர் நியமனம்
UPDATED : ஜன 18, 2021 12:00 AM
ADDED : ஜன 18, 2021 08:56 AM
அ நிறம் | அளவு
சேலம்:
தமிழகத்தில், வரும், 19 முதல், 10, பிளஸ் 2 மாணவர்களுக்கு, பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அங்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள, வழிகாட்டி நடைமுறைகளை அமல்படுத்த, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளி திறக்கும் முன் தயார் நிலையில் உள்ளதா என ஆய்வு நடத்த, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, சேலம் மாவட்ட கண்காணிப்பு அலுவலராக, சென்னை ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் அறிவொளி, மண்டல கண்காணிப்பு அலுவலராக, ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனர் லதா நியமிக்கப்பட்டுள்ளனர்.
