UPDATED : ஜன 19, 2021 12:00 AM
ADDED : ஜன 19, 2021 09:22 PM
அ நிறம் | அளவு
சென்னை:
அரபியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள திருக்குறள், இசை வடிவில் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
உலகப் பொதுமறையான திருக்குறள், பல்வேறு மொழிகளில், மொழியாக்கம் செய்யப்பட்டு, நுாலாக வெளிவந்துள்ளது. சென்னை பல்கலையின் அரபு மொழித் துறை தலைவர் ஜாஹிர் உசேன் ஏற்கனவே, திருக்குறளை, அரபி மொழியில் மொழி பெயர்த்து, நுாலாக வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், 2.25 லட்சம் ரூபாய் செலவில், திருக்குறள், அரபி மொழியில், பாடல் வடிவில், இசையுடன் கலந்து ஒலிப் புத்தகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையும், பேராசிரியர் ஜாஹிர் உசேனே செய்துள்ளார். இதை, முதல்வர் இ.பி.எஸ்., விரைவில் வெளியிட உள்ளார்.
