தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆதிவாசி உண்டு உறைவிட பள்ளிக்கு ஆசிரியர் அவசியம்!

ஆதிவாசி உண்டு உறைவிட பள்ளிக்கு ஆசிரியர் அவசியம்!

ஆதிவாசி உண்டு உறைவிட பள்ளிக்கு ஆசிரியர் அவசியம்!


UPDATED : நவ 07, 2009 12:00 AM

ADDED : நவ 07, 2009 09:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2009 12:00 AM ADDED : நவ 07, 2009 09:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

முக்கட்டி ஜி.டி.ஆர். பள்ளி பி.டி.ஏ. மற்றும் கிராமக்கல்விக்குழு இணைந்து மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

பந்தலூர் அடுத்துள்ள முக்கட்டி ஜி.டி.ஆர். நடுநிலைப்பள்ளியில் பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் 220 பேர் படித்து வருகின்றனர். கடந்த 2004ம் ஆண்டு நடுநிலைபள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமையாசிரியர் உள்ளிட்ட 3 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.

குறைவான ஆசிரியர்களால் நிறைவான கல்வியை போதிக்க முடியாத நிலையில் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் பலமுறை தெரிவித்தும் தீர்வு காணப்படாத நிலையில் பத்து நாட்களுக்குள் போதுமான ஆசிரியர்களை நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லாவிட்டால் வரும் 16ம் தேதி முதல் பள்ளி வளாகத்தின் முன்பாக பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவுடன் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us