தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லூரிகளில் ஓய்வு பெற்ற பேராசிரியர்களை நியமிக்க திட்டம்

கல்லூரிகளில் ஓய்வு பெற்ற பேராசிரியர்களை நியமிக்க திட்டம்

கல்லூரிகளில் ஓய்வு பெற்ற பேராசிரியர்களை நியமிக்க திட்டம்


UPDATED : நவ 08, 2009 12:00 AM

ADDED : நவ 08, 2009 10:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 08, 2009 12:00 AM ADDED : நவ 08, 2009 10:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தவளக்குப்பத்தில் உள்ள ராஜிவ் காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் று நடந்த விழாவில் அவர் பேசியதாவது:கிராமப்புறங்கள் கல்வியில் வளர்ச்சி அடைய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

உயர் கல்வியில் புதுச்சேரி இரண்டாம் இடத்தை வகிக்கிறது. தனியார் பள்ளி ஆசிரியர்களைவிட அரசு ஆசிரியர்கள் திறமைசாலியாக உள்ளனர். இக் கல்லூரியில் இன்னும் கூடுதலான பாடப்பிரிவுகள் துவக்கப்படும்.மேலும், அதிக வேலைவாய்ப்புகளை அளிக்கும் பாடங்கள் சமுதாயக் கல்லூரியில் துவங்கப்பட உள்ளது. அதிக வேலை வாய்ப்பிற்கான கல்வியைக் கொண்டு வருவதே அரசின் நோக்கம்.

கிராமப் புறங்களில் உள்ள இளைஞர்கள் அதிக திறமைசாலியாக இருந்தாலும்கூட பிறமொழி அனுபவமில்லாததால் வேலைவாய்ப்பு பிரச்னை இருக்கிறது. ஆறு ஏக்கர் நிலத்தில் 16 கோடி ரூபாய் செலவில் ராஜிவ்காந்தி கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. வேலை வாய்ப்பிற்காக மாணவர்களுக்கு இணையதளம் அதிக உதவியாக இருக்கும். கல்லூரியில் உள்ள விரிவுரையாளர்கள் பற்றாக்குறையை போக்க கிராமப்புறங்களில் உள்ள ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் பணியில் அமர்த்தும் திட்டம் தயராகி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us