தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ கல்வி மாணவர்கள் முன் மாதிரியாக வேண்டும்

மருத்துவ கல்வி மாணவர்கள் முன் மாதிரியாக வேண்டும்

மருத்துவ கல்வி மாணவர்கள் முன் மாதிரியாக வேண்டும்


UPDATED : பிப் 11, 2021 12:00 AM

ADDED : பிப் 11, 2021 04:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 11, 2021 12:00 AM ADDED : பிப் 11, 2021 04:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
"கர்நாடக மருத்துவ கல்வி மாணவர்கள், கொரோனா தடுப்பூசி போட்டு, மற்றவருக்கு முன் மாதிரியாக வேண்டும்," என, மருத்துவ கல்வித்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்தார்.
பெங்களூரின் விக்டோரியா மருத்துவமனையில், ரெஸ்பிரேட்டரி ஐ.சி.யூ., வை, அமைச்சர் சுதாகர், நேற்று திறந்து வைத்தார்.
பின் அவர் பேசியதாவது:

கொரோனா தொற்று கால் வைத்த, பத்தே மாதங்களில், மாநிலத்துக்கு தடுப்பூசி வந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், மருத்துவ கல்லுாரி மாணவர்கள், கொரோனா தடுப்பூசியின் துாதர்களாக இருக்க வேண்டும். மாணவர்கள், மருத்துவமனைக்கு வந்து, தடுப்பூசி பெற்றால், வேறு துறைகளின் ஊழியர்களுக்கு தைரியம் வரும். தடுப்பூசி பெற, சிலர் தேர்வை காரணம் காண்பிக்கின்றனர். ஆனால் தேர்வுக்கும், தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை. 
தடுப்பூசி பெற்றவர்களுக்கு, எந்த பின் விளைவும் ஏற்படவில்லை. பல அதிகாரிகள் முன் வந்து, தடுப்பூசி பெற்று, மற்றவருக்கு முன் மாதிரியாகினர். மாணவர்களும் தடுப்பூசி பெற வேண்டும். சில மாநிலங்களில், தடுப்பூசி பெறாவிட்டால், ஊதியம் வழங்கமுடியாது என கூறுகின்றனர். ஆனால், நம் மாநிலத்தில், எந்த கட்டுப்பாடும் இல்லை. இந்தியாவின் தடுப்பூசிக்கு, 25 நாடுகளில் &'டிமாண்ட்&' உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அரசு, இலவசமாக தடுப்பூசி வழங்கியுள்ளது. அதை போட்டுக்கொள்ள, முன் வர வேண்டும். கொரோனா வந்த பின், உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம், மக்களுக்கு புரிந்துள்ளது. எனவே மக்களின் சிகிச்சைக்கு தேவையான, அடிப்படை வசதிகளை அரசு செய்துள்ளது. 
சுகாதாரத்துறை சார்பில், 3,000 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், மருத்துவ கல்வித்துறை, 4,500 படுக்கை வசதி செய்யப்பட்டிருந்தது. தற்போது இவ்விரு துறைகள் ஒன்று சேர்ந்து, 30 ஆயிரம் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகள் வசதி செய்யப்பட்டுள்ளன. நடப்பாண்டு பட்ஜெட்டிலும், சுகாதாரத்துறைக்கு, கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க, முதல்வர் எடியூரப்பா முடிவு செய்துள்ளார். 
கொரோனா ஆரம்பமான போது, விக்டோரியா மருத்துவமனை, கணிசமாக சேவையாற்றியது. வாணி விலாஸ் மருத்துவமனையில், கொரோனா ஏற்பட்ட, 200க்கும் மேற்பட்ட கர்ப்பிணியருக்கு, வெற்றிகரமாக பிரசவம் நடத்தப்பட்டது. இதற்காக பாராட்டுகள். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us