UPDATED : மார் 07, 2021 12:00 AM
ADDED : மார் 07, 2021 08:53 AM
தர்மபுரி:
தர்மபுரி, அதகபாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன், மாநில அளவில் நடக்கும், யோகா போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் சார்பில், அரசு பள்ளிகளில் ஒன்பது முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கான யோகா போட்டிகள், ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டன. இதில், தர்மபுரி மாவட்டம், அதகபாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் ராகுல், கல்வி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். வருவாய் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்று, மாநில அளவில் நடக்கவுள்ள போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
மேலும், இதே பள்ளியை சேர்ந்த மாணவி சவுந்தர்யா மூன்றாம் இடம், மோகனா நான்காம் இடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை, தலைமையாசிரியர் கவிதா, உடற்கல்வி ஆசிரியர்கள் செந்தில்செல்வம், விஜியலட்சுமி உள்பட பலர் பாராட்டினர்.
