UPDATED : ஏப் 28, 2021 12:00 AM
ADDED : ஏப் 28, 2021 09:32 AM
கோவை:
தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சி மையங்கள், மறு உத்தரவு வரும் வரை பயிற்சி அளிக்க, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தடை விதித்துள்ளது.
மாநிலம் முழுவதும், நுாற்றுக்கணக்கான தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சி மையங்கள் அங்கீகாரம் பெற்று செயல்படுகின்றன. அரசு தேர்வுகளை எதிர்கொள்ள உள்ள மாணவர்கள், பள்ளி முடிக்கும் மாணவர்கள் கூடுதல் திறனாக இத்தேர்வுகளை எழுத, பயிற்சி மேற்கொள்வர். 2020 மார்ச் முதல் தொடர்ந்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பயிற்சி மையங்கள் மூடப்பட்டு இருந்தன.
தளர்வுகளை தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களாக, வழக்கம் போல் செயல்பட துவங்கியது. இந்நிலையில், கொரோனா மீண்டும் அதிகரிப்பதால், இப்பயிற்சி மையங்களில் மாணவர்களை வரவழைக்க கூடாது என்றும், மறு உத்தரவு வரும் வரை பயிற்சி மையங்கள் செயல்படக்கூடாது என்றும், தொழில்நுட்ப இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
