தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழ் இருக்கைக்கு நிதி நடிகர் கமல் பெருமிதம்

தமிழ் இருக்கைக்கு நிதி நடிகர் கமல் பெருமிதம்

தமிழ் இருக்கைக்கு நிதி நடிகர் கமல் பெருமிதம்


UPDATED : மே 02, 2021 12:00 AM

ADDED : மே 02, 2021 09:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 02, 2021 12:00 AM ADDED : மே 02, 2021 09:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
&'டொரோன்டோ தமிழ் இருக்கைக்காக, உலகம் முழுதும் உள்ள தமிழர்கள் நிதி அளித்தது, தமிழ் எழுச்சியின் அடையாளம்&' என, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: 

கனடாவில் லட்சக்கணக்கான தமிழர்கள் வசிக்கின்றனர். அவர்கள் ஒன்று கூடி, டொரான்டோ பல்கலையில், தமிழ் மொழிக்கு ஓர் இருக்கை அமைக்க வேண்டும் என, முடிவு செய்து நிதி திரட்ட ஆரம்பித்தனர்.தமிழ் இருக்கைக்காக, 30 லட்சம் டாலர்; இந்திய மதிப்பில், 22.22 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது.
முழுக்க பரவி வாழும் தமிழர்கள் பலர், இந்த பல்கலைக்கு நிதி அளித்துள்ளது, ஓர் உணர்வுப் பூர்வமான தமிழ் எழுச்சியின் அடையாளம்.உலக நாடுகளில் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ, அங்கிருந்து எல்லாம் தமிழ் இருக்கைக்கு நிதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியையும், அதற்கு கிடைத்த வெற்றியையும், கனடா பார்லிமென்ட் வெகுவாக பாராட்டியுள்ளது.
டொரான்டோ பல்கலையில், தமிழ் மொழிக்கு இருக்கை அமைந்துள்ளது என்பது, ஒவ்வொரு தமிழரும், மகிழ்ச்சி கொள்ள வேண்டிய தருணம். இந்த அரும்பெரும் முயற்சியை சாத்தியமாக்கிய ஒவ்வொருவருக்கும், என் மனப்பூர்வமான வாழ்த்துகள், பாராட்டுக்கள். இவ்வாறு, கமல் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us