வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க கால அவகாசம் வேண்டும்
வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க கால அவகாசம் வேண்டும்
UPDATED : மே 10, 2021 12:00 AM
ADDED : மே 10, 2021 01:51 PM
அ நிறம் | அளவு
சாத்துார்:
அரசு வேலைக்காக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் பதிவை புதுப்பிக்க காலஅவகாசம் வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக 2020ல் ஏராளமானவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்கவில்லை. இதனால் பதிவு மூப்பு அடிப்படையில் அரசு வேலை கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. தற்போது மீண்டும் கொரோனா மிரட்டுவதால் இன்று முதல் மே 24 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் 2020-2021ம் ஆண்டில் பதிவை புதுப்பிக்க அரசு காலநீட்டிப்பு வழங்க வேண்டும்என பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர். இதற்கு முன்பு 2016-19 வரை புதுப்பிக்க சலுகை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
