UPDATED : மே 11, 2021 12:00 AM
ADDED : மே 11, 2021 07:58 PM
மேட்டுப்பாளையம்:
வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, ரோட்டரி சங்கத்தினர் கம்ப்யூட்டர்களை வழங்கினர்.காரமடை அடுத்த வெள்ளியங்காட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.
இப்பள்ளி மாணவர்கள், பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, முதலிடத்தைப் பெற்று, பரிசு மற்றும் சான்றிதழ்களை பெற்றுள்ளனர். மேலும், மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை தேர்வில், 20க்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்று, உதவித்தொகை பெற்று வருகின்றனர். மேட்டுப்பாளையம், காரமடை ரோட்டரி கிளப் மற்றும் காக்னிசென்ட் இணைந்து, இப்பள்ளிக்கு கம்ப்யூட்டர்கள் வழங்கினர்.
பள்ளி வளாகத்தில் நடந்த விழாவுக்கு, காரமடை ரோட்டரி சங்கத் தலைவர் சிவசதீஷ்குமார் தலைமை வகித்தார். பள்ளிக்கு, 10 கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டன. ரோட்டரி சங்க செயலாளர் மகேஷ், திட்ட தலைவர் சுரேஷ் ஆனந்த கிருஷ்ணன், திட்ட சேர்மன் தினகரன், பள்ளித் தலைமை ஆசிரியர் பெள்ளி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமதாஸ், நிர்வாகிகள் கருப்பண்ணன், பரமேஸ்வரன் உள்ளிட்டோர், பங்கேற்றனர்.
