தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பார்வையற்றோர் பணி நியமனம்: அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

பார்வையற்றோர் பணி நியமனம்: அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

பார்வையற்றோர் பணி நியமனம்: அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்


UPDATED : நவ 12, 2009 12:00 AM

ADDED : நவ 12, 2009 12:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2009 12:00 AM ADDED : நவ 12, 2009 12:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு


இதற்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப் பட்டுள்ளது.


தமிழ்நாடு பார்வையற்றோர் ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் சொக்கலிங்கம் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனு: ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மாதம் 19ம் தேதி, விரிவுரையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களையும், விளக்க குறிப்பேட்டையும் வெளியிட்டது. ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்திலும், மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவனத்திலும் விரிவுரையாளர்களை நியமிப்பதற்காக இந்த விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டன.


விளக்க குறிப்பேட்டில், பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோர் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியில்லை எனக் கூறப்பட்டுள்ளது. உடல் ஊனமுற்றோர் சம வாய்ப்பு, உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின்படி, பார்வையற்றோர், காது கேளாதோர், உடல் ஊனமுற்றோருக்கு 3 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும்.இந்த 3 சதவீதத்தில், 1 சதவீதம் பார்வையற்றோருக்கும், 1 சதவீதம் காது கேளாதோருக்கும், 1 சதவீதம் உடல் ரீதியாக ஊனமுற்றோருக்கும் வழங்க வேண்டும்.


சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவிலும், இந்த 1 சதவீத இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாங்கள் இதுவரை இட ஒதுக்கீடு பெற்று வருகிறோம். கடந்த 2003ம் ஆண்டு மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவனத்தில், விரிவுரையாளர் பணியிடங்களுக்கு மூன்று பார்வையற்றோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த 2002ம் ஆண்டு, போட்டித் தேர்வு மூலம் ஏழு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


தற்போது, பார்வையற்றோருக்கு தகுதி இல்லை என விளக்க குறிப்பேட்டில் அரசு கூறியுள்ளது. இது, அரசியலமைப்பு சட்டத்திற்கும், இயற்கை நியதிக்கும் எதிரானது. தேர்வில் போட்டியிட எங்களுக்கு தகுதியில்லை எனக் கூறப்பட்டது. இது, எங்களுக்கு உள்ள சட்டப்பூர்வமான உரிமைகளை மறுப்பது போலாகும்.


எனவே, விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கு தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். விரிவுரையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி இல்லையென விளக்க குறிப் பேட்டில் குறிப்பிட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும். காலி இடங்களில் 1 சதவீதத்தை பார்வையற்றோருக்கு ஒதுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


மனுவை நீதிபதிகள் பிரபா ஸ்ரீதேவன், சத்தியநாராயணன் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்&' விசாரித்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் கோவி ராமலிங்கம் ஆஜரானார். மனுவுக்கு, இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us