தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அண்ணா பல்கலை தேர்வு தரத்தை குறைக்க வேண்டாம்

அண்ணா பல்கலை தேர்வு தரத்தை குறைக்க வேண்டாம்

அண்ணா பல்கலை தேர்வு தரத்தை குறைக்க வேண்டாம்


UPDATED : மே 23, 2021 12:00 AM

ADDED : மே 23, 2021 09:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 23, 2021 12:00 AM ADDED : மே 23, 2021 09:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
மறுதேர்வு வழியாக, அண்ணா பல்கலை தேர்வு முறையை தரமற்றதாக மாற்றி விடக்கூடாது என, முதல்வர் ஸ்டாலினுக்கு, பல்கலையின் முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி கடிதம் எழுதியுள்ளார்.

பாலகுருசாமி அனுப்பிஉள்ள கடிதம்:

அண்ணா பல்கலை நடத்திய, &'ஆன்லைன்&' தேர்வில், எந்த முறைகேடும் நடக்கவில்லை. இந்த தேர்வு முறை, இணைய வழி மதிப்பீட்டு வல்லுனர் குழுவால் உருவாக்கப்பட்டது. செயற்கை அறிவு சார்ந்த, &'சாப்ட்வேர்&' வழியாக தேர்வு நடத்தப்பட்டுள்ளது. எனவே, முறைகேடு நடந்ததாக குறிப்பிட்டால், அது அண்ணா பல்கலையின் பெயரை மங்கச் செய்யும்.
இந்த தேர்வில், 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள், முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இது, வருத்தத்தை தருகிறது. இந்த தேர்வு முறையில், தவறுகளை ஆய்வு செய்ய அவகாசம் தேவைப்படுகிறது.எனவே, இணையவழி தேர்வு முறைக்கு மாறாக, கண்காணிக்கப்படாத தேர்வு முறையை நடத்துவது, தவறான வழியாகும்.
மற்ற பல்கலைகளில் நடத்தப்படும் ஆன்லைன் தேர்வுகள், சரியான தரநிலைகளுக்கு ஏற்ப உறுதி செய்யப்படவில்லை. அப்படிப்பட்ட தேர்வு முறையை, அண்ணா பல்கலை மாணவர்களுக்கும் நடத்துவது துரதிருஷ்டவசமானது. உயர் கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ள தேர்வு முறையில், மாணவர்கள் வீட்டில் இருந்தே வினாத்தாளை பெற்று, புத்தகத்தை பார்த்து எழுதவும், காப்பி அடிக்கவும் வாய்ப்பாக அமையும்.
இது, திறமையான மாணவர்களை கண்டறிய உதவாது. இந்த திட்டம், நம் பல்கலை மாணவர்களின் தரத்தை தாழ்த்துவதுடன், நம்பக தன்மையை குறைக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, அண்ணா பல்கலையின் தேர்வு முறையை மாற்றுவதற்கு, அகாடமிக் கவுன்சிலில் விவாதித்து, சிண்டிகேட் குழுவின் ஒப்புதல் பெற வேண்டும். நேரடியாக உத்தரவிட கல்வி அமைச்சருக்கோ, செயலருக்கோ அதிகாரமில்லை. இந்த தேர்வு முறையை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் வாய்ப்புள்ளது.
எனவே, பல்கலையின் மாண்பை நிலைநிறுத்த, சரியான ஐ.ஏ.எஸ்., அதிகாரியை நியமித்து, பல்கலை நிர்வாகத்தை தரமானதாக மேற்கொள்ள வேண்டும். தற்போதைய செயலர் மீது, சென்னை உயர் நீதிமன்றம் கண்டனத்தை பதிவு செய்ததை, நினைவு படுத்த விரும்புகிறேன். உயர்கல்வி நிர்வாகத்தில், 10 ஆண்டுகளாக நிலவும் வசூல், பங்கு மற்றும் ஊழலின் கோரப்பிடியை விடுவிக்க, உயர் கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us