தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி விவகாரத்தில் நியாயமான விசாரணை: சாமி எச்சரிக்கை

பள்ளி விவகாரத்தில் நியாயமான விசாரணை: சாமி எச்சரிக்கை

பள்ளி விவகாரத்தில் நியாயமான விசாரணை: சாமி எச்சரிக்கை


UPDATED : மே 29, 2021 12:00 AM

ADDED : மே 29, 2021 12:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 29, 2021 12:00 AM ADDED : மே 29, 2021 12:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

&'பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில், நியாயமான விசாரணையை மேற்கொள்ள எந்தத் தடையும் இல்லை. ஆனால், உள்நோக்கத்தோடு அரசு தரப்பில் செயல்படுவதாகத் தெரியவந்தால், தமிழக அரசை கலைப்பதை தவிர வேறு வழியில்லை,&'&' என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமி கூறினார்.
அவர் அளித்த பேட்டி:

சென்னை, கே.கே.நகரில் இயங்கி வரும் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில், வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியல் ஆசிரியராக பணியாற்றிய ராஜகோபாலன் மீது, பாலியல் புகார் எழுந்துள்ளது.
சமூக வலைதளம்

இதைத் தொடர்ந்து, காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆசிரியர் ராஜகோபாலனை பணியிடை நீக்கம் செய்தும், பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. பள்ளியில் நடந்ததாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டு குறித்து, தீவிர விசாரணை நடப்பது வரை எதுவும் தவறில்லை. ஆனால், குறிப்பிட்ட அந்த பள்ளிக்கு எதிராக வன்மத்தோடு, சிலர் திராவிடர் கழக முத்திரையுடன், சமூக வலைதளங்களில் வேகமாக இயங்கி வருவதும், அதை வைத்து, அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்க முயற்சிப்பது போல, ஒரு தோற்றத்தை உருவாக்குகின்றனர். அது தான் தவறு.
நீண்ட காலத்துக்குப் பின், தி.மு.க., ஆட்சிக்கு வந்திருக்கிறது. பெரிய மெஜாரிட்டியில் வெற்றி பெற்று வரவில்லை. அதனால், எல்லா விஷயங்களிலும் தீர்க்கமாகவும், தெளிவாகவும் செயல்பட வேண்டும். இல்லையென்றால், ஆட்சியை கலைக்கும் சூழல் உருவாகும். அரசு, இந்த விஷயத்தில் உள்நோக்கம் கொண்டு பள்ளி நிர்வாகத்தை நசுக்க நினைத்தால், ஆட்சியை கலைப்பதை தவிர, வேறு வழியில்லை. கட்டாயம் அதை செய்து காட்டுவேன்.

ஒரு தலைபட்சம்

தி.மு.க.,வுக்கு பின்புலமாக இந்த விஷயத்தில், தி.க., தான் செயல்படுகிறது. தி.மு.க., ஆட்சி மிக சுலபமாக ஏற்பட்டு விடவில்லை. ஸ்டாலினின் மனைவி துர்காவின் கடவுள் சிந்தனை, வழிபாடு இவைகளின் பலனாகத் தான், ஸ்டாலினுக்கு முதல்வர் ஆகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை, அவர் நல்ல வழியில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.கல்வியில் சிறந்ததாகச் சொல்லப்படும் பள்ளி என்றால், அதில் எப்படியாவது தம் பிள்ளைகளுக்கு &'சீட்&' வாங்கி விட வேண்டும் என்று தான் எல்லா பெற்றோரும் நினைப்பர். 
அதற்காக, பல்வேறு வகையில் சிபாரிசுகளையும் செய்வர். அப்படி, இந்தப் பள்ளியில் சீட் கேட்டு சிபாரிசு செய்தவர்கள் பலரையும், நிர்வாகத்தினர் ஆணவத்தோடு அவமரியாதை செய்திருக்கின்றனர். அதெல்லாம் கூட, இந்தப் பிரச்னை பூதாகரமாக்கப்படுவதன் பின்னணியாக இருக்கின்றன.
அதனால், இதன் பின்பாவது பள்ளி நிர்வாகம் ஆணவத்தோடு நடப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். என்னைப் பொறுத்தவரை விசாரணை ஒரு தலைபட்சமில்லாமல் நேர்மையாக நடக்க வேண்டும். அதில் துளி அளவு சந்தேகம் ஏற்பட்டாலும், தமிழகத்தில் விசாரணை நடக்கவிடாமல் செய்து விடுவேன். அதற்கான சட்ட நுணுக்கங்கள் எனக்குத் தெரியும். அதேபோல, பள்ளியை மூடுவது, நிர்வாகத்தை மாற்றுவது என, அரசு தரப்பு முயற்சித்தாலே போதும்; அப்படியெல்லாம் செய்து முடிக்க, அவர்கள் கையில் ஆட்சி இருக்காது. இவ்வாறு, சுப்பிரமணியசாமி கூறினார்.

&'மாடல்&' அழகியால் வந்த பிரச்னை!

&'&'பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் பிரச்னையை, ஒரு மாடல் அழகி மூலம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது, சந்தேகத்தை ஏற்படுத்துகிறது,&'&' என, தமிழக பா.ஜ., பிரமுகர் காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.

தமிழக பா.ஜ., கலை- இலக்கிய பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் கூறியதாவது:

பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் அவரது மகள் மதுவந்தியை குறிவைத்து, பரபரப்பாக்கி வருகின்றனர். என்ன காரணம்,- இருவரும் பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்பட்டனர் என்பது தான். பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்படுவது, அவ்வளவு பெரிய குற்றமா?
இது சிலரின், &'டார்கெட்&' என்றால், வேறு பலரின், &'டார்கெட்&' ஜாதிய ரீதியில், இந்தப் பள்ளியை வீழ்த்த வேண்டும் என்பது. நடந்த சம்பவத்தில் குற்றம் இழைத்தவர், ஆசிரியராக இருந்த ராஜகோபாலன். அவரை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்; அதில் தவறில்லை. ஆனால், பள்ளியையும், பள்ளி நிர்வாகத்தையும் வம்புக்கு இழுப்பது ஏன்?பள்ளியில் &'சீட்&' கிடைக்காதவர்கள் எல்லாம் சேர்ந்து, இந்த பிரச்னையை பெரிதுபடுத்துவதாக சொல்கின்றனர். பிராமண சமூகத்தைச் சேர்ந்தவள் என்பதோடு, பள்ளி நிர்வாகத்துக்கு நெருக்கமான குடும்பத்தைச் சேர்ந்த, எனக்கும் அந்தப் பள்ளியில் &'சீட்&' கிடைக்கவில்லை தான். அதற்காக, அந்தப் பள்ளி மீது அவதுாறு செய்ய முடியுமா?
தமிழகத்தைப் பொறுத்தவரை, தி.மு.க., புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கிறது. கொரோனா பிரச்னையை மறைக்க, ஒரு கருவி தேடிக் கொண்டிருந்தனர். வசமாக சிக்கி விட்டது, பள்ளி பாலியல் துன்புறுத்தல் விவகாரம். நடந்தது தவறு தான். அதை யாரும் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், எங்குமே இந்த விவகாரம் நடக்காதது போல, ஒரு தோற்றத்தை உருவாக்கி, அதை பெரிதுபடுத்துவதைத் தான் ஏற்க முடியவில்லை.
&'பள்ளியை அரசு ஏற்று நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது&' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் சொல்கிறார் என்றால், என்ன அர்த்தம்? பிராமணர் நடத்தும் பள்ளி, சிறப்பாக நடத்தப்பட்டு வந்தால், அதை அரசு ஏற்று நடத்துமா? இந்த பள்ளியில் படித்த &'மாடல்&' கிரிபாலி சாம்டாரியா என்பவர் தான், பாலியல் துன்புறுத்தல் குறித்து, புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகாரில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பது, போலீஸ் விசாரணைக்குப் பின் தெரிய வரும். ஒரு விஷயத்தை மடைமாற்றம் செய்வதற்காக, காங்., தான், இப்படிப்பட்ட காரியங்களை செய்து வந்தது.
இப்போது, தி.மு.க.,வும் செய்யத் துவங்கி இருக்கிறது. குற்றம் என்றால் எல்லாமே குற்றம் தான். முதல்வர் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளில், ஆங்கில மொழியில் பேசவில்லை என்றால், அபராதம் விதிக்கின்றனர். தாய் தமிழ் மொழியில் பேசக் கூட, சுதந்திரம் இல்லாமல் தான், அங்கே குழந்தைகள் தத்தளிக்கின்றனர். இதுமாதிரி குற்றங்கள், பிரச்னைகள் என்றால், எல்லா இடங்களில் இருப்பதை சொல்லிக் கொண்டே போகலாம். அங்கு படிக்கும் பிள்ளைகளை விட்டு புகார் கொடுக்கச் சொல்கிறேன். அமைச்சர் மகேஷ் விசாரித்து, குறிப்பிட்ட அந்த பள்ளியையும் அரசுடைமை ஆக்குவாரா? இவ்வாறு காயத்ரி ரகுராம் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us