தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கட்டணம் செலுத்தாத மாணவர்களிடம் பாரபட்சம்: பள்ளிக்கு நோட்டீஸ்

கட்டணம் செலுத்தாத மாணவர்களிடம் பாரபட்சம்: பள்ளிக்கு நோட்டீஸ்

கட்டணம் செலுத்தாத மாணவர்களிடம் பாரபட்சம்: பள்ளிக்கு நோட்டீஸ்


UPDATED : ஜூன் 10, 2021 12:00 AM

ADDED : ஜூன் 10, 2021 03:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 10, 2021 12:00 AM ADDED : ஜூன் 10, 2021 03:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
நடப்பு கல்வியாண்டு துவங்கும் முன், ஆன்லைனில் வகுப்பை துவங்கிய, கட்டணம் செலுத்தாத மாணவர்களை பாரபட்சமாக நடத்திய தனியார் பள்ளிக்கு, கல்வித்துறை, &'நோட்டீஸ்&' அனுப்பியுள்ளது.
ஜூலை 1 முதல், கல்வியாண்டு துவங்கவுள்ளது. ஜூன் 15 முதல் மாணவர் சேர்க்கைக்கு, கல்வித்துறை வாய்ப்பளித்துள்ளது. ஆனால் பெங்களூரு நந்தினி லே - அவுட்டிலுள்ள, தனியார் பள்ளியொன்று, கல்வியாண்டு துவங்குமுன்பே வகுப்புகளை துவங்கியுள்ளது. முந்தைய ஆண்டு கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு, ஆன்லைன் கல்வியை நிறுத்தி, பாரபட்சமாக நடந்து கொண்டது. 

இது தொடர்பாக, மாணவர் ஒருவரின் பெற்றோர், அளித்த புகாரின்படி கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியது.நோட்டீசில் கூறப்பட்டிருந்ததாவது:

கல்வியாண்டுக்கு முன்பே, ஆன்லைன் வகுப்பு நடத்துவது தவறு. மாணவரை ஆன்லைன் வகுப்பிலிருந்து, பிளாக் செய்வது, மற்ற மாணவர்களுக்கு தெரியும் வகையில், ஸ்கீரின் மீது காண்பிப்பதால், மாணவர்கள் மனரீதியில் பாதிக்கப்படுவர்.இதற்கு பள்ளி நிர்வாகமே நேரடி பொறுப்பு. 
கொரோனா நேரத்தில் மாணவர்களை மனரீதியில் துன்புறுத்துவது, தேசிய குழந்தைகள் ஆணையத்தின் விதிமுறைக்கு எதிரானது. போதிய ஆவணங்களுடன் விளக்கமளிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us