தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்திய மாணவர்கள் எங்கள் விருந்தாளிகள்: ஆஸி., பிரதமர்!

இந்திய மாணவர்கள் எங்கள் விருந்தாளிகள்: ஆஸி., பிரதமர்!

இந்திய மாணவர்கள் எங்கள் விருந்தாளிகள்: ஆஸி., பிரதமர்!


UPDATED : நவ 13, 2009 12:00 AM

ADDED : நவ 13, 2009 11:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2009 12:00 AM ADDED : நவ 13, 2009 11:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்திய மாணவர்கள் மட்டுமின்றி அனைத்து நாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்நாட்டின் பிரதமர் கெவின் ரூட் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. இந்த விவகாரத்தை பிரதமர் மன்மோகன் சிங்கும், வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவும் ஏற்கனவே அந்நாட்டின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில், முன்தினம் இந்த விவகாரம் தொடர்பாக பேசிய வெளியுறவு அமைச்சக தகவல் தொடர்பாளர், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. இருந்தாலும், இந்திய மாணவர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர். கடந்த வாரம் கூட இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. அது வருந்தத்தக்கது எனக் கூறியிருந்தார்.

இந்த சூழ்நிலையில், டில்லியில் இந்திய தொழில் சம்மேளனம், இந்திய தொழில் வர்த்தக சபை சம்மேளனம் ஆகியவை ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் கூறியதாவது:

ஆஸ்திரேலியாவில் படிக்கும் அனைத்து நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதில், எங்களின் அரசு உறுதியாக உள்ளது. அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்திய மாணவர்களுக்கு நட்புக்கரம் நீட்டவும், அவர்களுக்கு ஆதரவு தரவும் நாங்கள் தயாராக உள்ளோம். இந்திய -  ஆஸ்திரேலிய வர்த்தக உறவுகளுக்கு இந்திய மாணவர்கள் எதிர்காலத்தில் ஒரு பாலமாக இருப்பர். எனவே, அவர்கள் எல்லாம் எங்கள் நாட்டின் விருந்தாளிகள். இவ்வாறு கெவின் ரூட் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us