தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு வர உத்தரவு

அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு வர உத்தரவு

அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு வர உத்தரவு


UPDATED : ஜூன் 15, 2021 12:00 AM

ADDED : ஜூன் 15, 2021 08:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 15, 2021 12:00 AM ADDED : ஜூன் 15, 2021 08:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கைக்காக, ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுதும் புதிய கல்வி ஆண்டுக்கான பணிகள் நேற்று துவங்கின. பிளஸ் 1 வரையில், அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடத்த, பள்ளி கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. அதனால், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை பணிகள் துவங்கி உள்ளன. அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களும், அலுவலக பணியாளர்களும் தினமும் பணிக்கு வர வேண்டும் என, ஏற்கனவே உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள புதிய சுற்றறிக்கை:

பள்ளிகளின் கல்வி ஆண்டு நிர்வாக பணிகளுக்கு, தலைமை ஆசிரியரின் உதவிக்கு, ஆசிரியர்களும் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும். அவர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகளை, மாவட்ட கலெக்டர் அலுவலகம் வழியே, முதன்மை கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வேளாண் ஊழியர்கள் பணிக்கு வர உத்தரவு

வேளாண் துறை பணியாளர்கள், இன்று முதல், 100 சதவீதம் பணிக்கு வர வேண்டும் என, வேளாண் துறை செயலர் சமயமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். மேட்டூர் அணை திறக்கப்பட்டு, டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி துவங்க உள்ளதால், துறை பணிகளை கவனிக்க, அனைவரையும் பணிக்கு வர உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us