கல்லுாரியில் ஆன்லைன் வகுப்பு நிர்வாகிகள் சங்கம் வலியுறுத்தல்
கல்லுாரியில் ஆன்லைன் வகுப்பு நிர்வாகிகள் சங்கம் வலியுறுத்தல்
UPDATED : ஜூலை 11, 2021 12:00 AM
ADDED : ஜூலை 11, 2021 09:42 AM
இச்சங்க பொதுச் செயலர் ராஜகோபால் கூறியிருப்பதாவது:
அனைத்து கல்லுாரிகளிலும் ஆக., 1க்கு பின் மாணவர் சேர்க்கை துவங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால் ஜூலை 31ல் சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மதிப்பெண்கள் வெளியிடப்பட உள்ளது. கல்லுாரியில் இந்தாண்டு மாணவர்கள், மூன்றாவது மற்றும் ஐந்தாவது செமஸ்டர் படிக்க வேண்டியுள்ளது.
கொரோனா காரணமாக, ஆன்லைன் வகுப்புகளாவது துவங்காதா என மாணவர், பெற்றோர் எதிர்பார்ப்பில் உள்ளனர். அனைத்து கல்லுாரி நிர்வாகங்களும் ஆன்லைன் வகுப்பு எடுக்க தயாராக உள்ளன. ஆனால், உயர்கல்வி துறை அனுமதிக்கவில்லை.ஒரு செமஸ்டருக்கு 90 வேலை நாட்கள் தேவை.
கடந்த செமஸ்டர் வகுப்பு ஜன., துவங்கி மே வரை நடந்தது. இதற்கான தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தி, முடிவும் அறிவிக்கப்பட்டது. ஜூலை 14ல் ஆன்லைன் வகுப்பு துவங்கினால் கூட நவ., 5 வரை வகுப்பு நடத்த வேண்டியிருக்கும். மாணவர்கள் நலன் கருதி ஆன்லைன் வகுப்பு துவங்க, தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
